(நமது நிருபர்)
சுருதி என்ற புனைப் பெயரைக் கொண்ட வைத்திய கலாநிதி சுஜந்தன் காசிலிங்கம் எழுதிய 'ஊன்றுகோல்' நூல் அறிமுக விழா நாளை (26) சனிக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ளது.
கவிஞர் பாலரதி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் புலவர் சிவநாதன் ஆசியுரையும் வாணன் வெளியீட்டு உரையையும் நிகழ்த்துவர்.
தமிழறிஞர் மூத்த ஊடகவியலாளர் எழுத்தாளர், சைவசித்தாந்த ஆசிரியர், முனைவர் பட்ட ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன், போரியல் ஆய்வாளர் அருஸ், அண்ணா பல்கலைக்கழக ஆசிரிய பட்டதாரி மாணவி திருமதி விழியரசி, தமிழவையின் திருமதி அஞ்சு ராமதாஸ், ஆய்வாளர் குணாகவியழகன், பொருளாதார ஆய்வாளர் க.பாலகிருஸ்ணன் ஆகியோர் கருத்துரையாற்றுவார்கள்.
இந்நிகழ்வு பிற்பகல் 1.00 மணி தொடக்கம் 4.30 வரையில் St. John The Evangelists Community Centre, Wembley, HA0 2HX என்ற இடத்தில் நடைபெறும்.
இந்த நிகழ்வு நூலாசிரியரின் சகோதரர் விஜிந்தன் காசிலிங்கம் (கப்டன்) மலரவனின் 30 ஆம் வருட நினைவு நாளையொட்டி இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்கால வலிகள் நிறைந்த வாழ்க்கையையும் சாட்சிகளற்று இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளையும் இந்நூல் சுமந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM