வாகன சாரதிகளுக்கான குறைந்தப்பட்ச தண்டப்பணமான 25 ஆயிரம் ரூபா நடைமுறைப்படுத்தப்படாது என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ்கள் சங்கங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும்  அகில இலங்கை தனியார் பஸ்கள் சங்கங்கங்களின் சம்மேளனத்திற்கும் இடையிலான விசேட கலந்துரையாடலின் போது குறித்த விடயத்தினை ஜனாதிபதி தெரிவித்ததாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர்  அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் தண்டப்பணம் தொடர்பில் பஸ் உரிமையாளர் சங்கங்களிடம் கலந்துரையாடப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் இவர் தெரிவித்தார்.