கண்டி, நுவரெலியாவில் பின்தங்கிய மாணவர்களுக்கான விசேட உதவித்திட்டம் - ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் நலன்புரிச் சங்கம் அறிவிப்பு 

By Nanthini

25 Nov, 2022 | 01:45 PM
image

ண்டி, நுவரெலியா மாவட்டங்களை சேர்ந்த பின்தங்கிய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை இலவசமாக வழங்கும் திட்டமொன்றை ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் நலன்புரிச் சங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

அதன் முதற்கட்ட பணி எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளதோடு, வருடந்தோறும் மேற்கொள்ளப்படும் என ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளரும், மேற்படி நலன்புரி அமைப்பின் தலைவருமான கலாநிதி ஜனக லிந்தர தெரிவித்துள்ளார்.

பேராதனையிலுள்ள ஏற்றுமதி விவசாய திணைக்களத்தில் நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

‘அக்குறட சவிய’ (எழுத்துக்கு சக்தி) என்றழைக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், பாடப்புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், எழுது கருவிகள் மற்றும் பாதணிகள் போன்ற பாடசாலை கல்விக்குத் தேவையான பல பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களை சேர்ந்த பின்தங்கிய பிரதேச பாடசாலைகளை சேர்ந்த குறைவருமானம் கொண்ட குடும்பங்களில் இருந்து இதற்காக மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

இந்த திட்டத்துக்கு நலன் விரும்பிகளிடமிருந்து நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது என்றார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சுப்பதவிகளை அதிகரிக்க அரசாங்கத்திற்கு இருக்கும் உரிமை...

2022-12-09 17:21:08
news-image

இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் ...

2022-12-09 21:06:09
news-image

3 பில்லியன் டொலராக வெளிநாட்டு கையிருப்பை ...

2022-12-09 17:24:21
news-image

டயனா கமகே தொடர்பில் முன்வைத்த விமர்சனங்கள்...

2022-12-09 21:05:22
news-image

ஓய்வூதிய வயது 61 என்ற தீர்மானத்தை...

2022-12-09 13:43:10
news-image

ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சொகுசு மெத்தை...

2022-12-09 17:12:08
news-image

பொருளாதாரச் சுமையை நாட்டு மக்கள் மீது...

2022-12-09 13:42:09
news-image

நீதிமன்ற பாதுகாப்பிலிருந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய...

2022-12-09 19:47:17
news-image

புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்...

2022-12-09 16:38:53
news-image

கூட்டமைப்பினரை எதிர்த்தமைக்கான காரணத்தை தெரிவித்தார் உதய...

2022-12-09 11:32:18
news-image

காற்று மாசடைவில் கணிசமான மாற்றம் :...

2022-12-09 13:45:15
news-image

நாளை புயலாக மாறுகிறது மாண்டஸ் :...

2022-12-09 16:47:25