திருகோணமலையில் திட்டம் தயாரிப்பு செயலமர்வு!

By Vishnu

25 Nov, 2022 | 02:26 PM
image

திருகோணமலை பட்டணமும் சூழலும்பிரிவு பிரதேச சபையின் சமூக பிரதிகளுக்கான செயற்றிட்டமுன்மொழிவு தயாரித்தல் தொடர்பான செயலமர்வு சபையின் செயலாளர் திருமதி. நரேந்திரநாத் யாழினி, தலமையில் காலை 9.30மணிக்கு ஆரம்பமாகி  நடைபெறுகிறது.

இங்கு வளவாளராக அன்பழகன் குரூஸ் கலந்து கொண்டு நெறிப்படுத்துகின்றார். 

இந்நிகழ்வு தொடர்ந்து நாளையும் நடைபெறவுள்ளது. அகத்தின் இணைப்பாளர். பொ. சற்சிவானந்தம் திட்ட விளக்க உரையை நிகழ்த்தினார். 

இந்நிகழ்வில் பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் கதிர்காமநாதன் சிவகுமார், கிருஸ்ணபிள்ளை தயானந்தன் உள்ளூராட்சி உதவி உத்தியோகத்தர், சபையின் உறுப்பினர் சந்திரதாஸ் விபூசனன், யூஸ் எயிட் திட்ட உத்தியோகத்தர். 

திருமதி. சுபத்திராவும் அகத்தின் திட்ட உத்தியோகத்தர் வே. மோகனும் கலந்து கொண்டமை சிறப்பு விடயமாகும்.

சபைகளின் செயலாளர் யாழினி பேசும் போது, அகத்தின் மூலம் பல்வேறு செயற்றிடங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர்களது இந்த திட்ட நடவடிக்கை காரணமாக பிரதேச சபைக்கும் மக்களுக்குமான தொடர்பாடல் அதிகரித்துள்ளது.

மட்டுமன்றி மக்களுக்கும் சபைக்கும் இடையில் இருந்த இடைவெளி குறைந்துள்ளதை உணர்கின்றோம். எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திய அகம் நிறுவன முகாமைக்கு எமது மேலான நன்றிகளை தெரிவிக்கின்றோம் எனத்தெரிவித்தார். 

இதேகருத்தை உள்ளூராட்சி உதவி உத்தியோகத்தர் திரு. தயானந்தனும் தனது வரவேற்புரையில் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான திட்ட நடவடிக்கை 5 பிரதேச சபை களில் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அகத்தின் இணைப்பாளர் பொ. சற்சிவானந்தம் தெரிவுத்தார்.

பிரதேச சபையின் நடவடிக்கை களில்மக்களின்பங்களிப்பை அதிகரிக்கும் நோக்குடன் உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சுப்பதவிகளை அதிகரிக்க அரசாங்கத்திற்கு இருக்கும் உரிமை...

2022-12-09 17:21:08
news-image

இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் ...

2022-12-09 21:06:09
news-image

3 பில்லியன் டொலராக வெளிநாட்டு கையிருப்பை ...

2022-12-09 17:24:21
news-image

டயனா கமகே தொடர்பில் முன்வைத்த விமர்சனங்கள்...

2022-12-09 21:05:22
news-image

ஓய்வூதிய வயது 61 என்ற தீர்மானத்தை...

2022-12-09 13:43:10
news-image

ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சொகுசு மெத்தை...

2022-12-09 17:12:08
news-image

பொருளாதாரச் சுமையை நாட்டு மக்கள் மீது...

2022-12-09 13:42:09
news-image

நீதிமன்ற பாதுகாப்பிலிருந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய...

2022-12-09 19:47:17
news-image

புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்...

2022-12-09 16:38:53
news-image

கூட்டமைப்பினரை எதிர்த்தமைக்கான காரணத்தை தெரிவித்தார் உதய...

2022-12-09 11:32:18
news-image

காற்று மாசடைவில் கணிசமான மாற்றம் :...

2022-12-09 13:45:15
news-image

நாளை புயலாக மாறுகிறது மாண்டஸ் :...

2022-12-09 16:47:25