அசல் பட்டுச் சேலை

By Devika

25 Nov, 2022 | 01:23 PM
image

உலகளவில் சீனாவுக்கு அடுத்த­படியாக இந்தியாவில்தான் பட்டு நூல்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

குறிப்பாக சாதாரண பட்டு சேலையை அசல் பட்டு சேலை என்று ஏமாற்றி விற்பனை செய்யும் நிலை நீடித்து வருகிறது. அசல் பட்டு சேலை எவ்வாறு இருக்கும்? அதை அடை­யாளம் காண்பது எப்படி? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

பொதுவாக பட்டு சேலையை திருமணம் உள்பட முக்கிய விழாக்களுக்கு அணிந்து செல்வார்கள். பட்டு சேலையில் சரிகை புரக்கோடு, கோர்வை, பட்டு செல்ப் என்ற வகைகள் உள்ளன. சரிகை புரக்கோடு வகையில் டிசைன்கள் குறை­­­வாக இருக்கும். கோர்வை­­யில் ஆங்காங்கே டிசைன்­கள் இருக்கும். பட்டு செல்ப் வகையில் டிசைன்­கள் அதிக­மாக இருக்கும்.

அசல் பட்டு சேலையில் உள்ள பட்டுகள் அனைத்­தும் பட்டு நூலை அவித்து செய்யப்­பட்டது ஆகும். அதன் தரம் நன்றாக இருப்பதுடன், கண்ணைக் கவரும் வகை­யில் இருக்கும்.

பட்டு சேலையில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரைதான் செய்ய முடியும். அதில் தங்க ஜரிகை இருக்கும். அதற்கு மேல் விலை கொண்ட சேலையில் விலை உயர்ந்த வைரக்­­ கற்கள் பொறிக்கப்­பட்டிருக்கும். இதனால்தான் அந்தப் பட்டு சேலை­களின் விலை அதிகம்.

பட்டு சேலையை ஏழை - எளிய மக்களும் வாங்கி அணிய வேண்டும் என்ற எண்ணத்தில் கோரா பட்டு என்ற வகை சேலை அறி­­­முகப்படுத்­தப்­பட்­டது. இந்த பட்டு சேலை­யின் நூலை அவிக்கா­மல் அப்படியே செய்­வார்­கள். இதனால் இதன் விலை குறைவு. இந்த வகை சேலையும் அசல் பட்டு சேலையை போன்று மிருது­­வாகவும், பளிச்சென்றும் இருக்­கும்.

பட்டு சேலையை மற்றதுணிகள் போல துவைத்துவிடக்கூடாது. பட்டு சேலையில் அழுக்கு மற்றும் கறையை எடுக்கக் கூடிய திரவங்கள் கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம். 

சிலர் தெரியாமல் பட்டு சேலையை டிரை­­வொஷ் செய்து விடுகிறார்கள். அவ்­­வாறு செய்தால் அதன் பளபளப்பு குறைந்து­­விடும். அவ்வாறு செய்யக் கூடாது. 

ஒரு வாளி தண்ணீரில் ஒரு லீட்டர் பாலை கலந்து, அதில் பட்டு சேலையை முக்கி வெயிலில் காயப்போட வேண்டும். அவ்வாறு செய்யும்போது, பட்டு சேலையில் மேலும் பளபளப்பு அதிகரிக்கும். 

அத்துடன் குறைந்தது 6 மாதத்துக்கு ஒரு­முறை வெயிலில் ஒரு மணி நேரம் காய வைக்க வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை சேலையின் மடிப்பை மாற்றி மடிக்க வேண்டும். 

சிலர் பட்டு சேலையை உடுத்திவிட்டு கழற்றியதும், அதை மடித்து வைத்துவிடு­வார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. நமது உடலில் உள்ள வியர்வை அதன் மீது பட்டிருக்கும். அதை காயவைத்துவிட்டு வைக்கும்போது எந்த பாதிப்பும் வராது. 

குறிப்பாக பட்டு சேலையை சரியான முறையில் பராமரித்து வந்தால் பல ஆண்டு­கள் வரை அதன் பளபளப்பு, மென்மை போகாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்