மனித புதைகுழி எச்சங்களை பகுப்பாய்வுக்கு தெரிவு செய்ய மன்னார் நீதிமன்றம் அனுமதி

Published By: Digital Desk 3

25 Nov, 2022 | 01:11 PM
image

(வாஸ் கூஞ்ஞ)

அமெரிக்கா புளோரிடா நிறுவனத்துக்கு காபன் பரிசோதனைக்காக கொண்டு செல்வதற்கு மனித புதைகுழி எச்சங்களை அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் பகுப்பாய்வுக்கு தெரிவு செய்ய அனுமதிப்பதற்கான விண்ணப்பத்தில் மன்னார் நீதிமன்றம் நீதவான் கையொப்பம் இட்டுள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு நேற்று (24) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் அப்துல் சமட் கிப்துல்லா முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜராகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன் இவ் வழக்கு தொடர்பாக தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்ட  நீதவான்  நீதிமன்றத்தில் திருக்கேதீஸ்வரத்தின் மனித புதைகுழி வழக்கு இல. பி768 – 2013 ஆம் ஆண்டுக்கான வழக்கு நீதவான் அப்துல் சமட் கிப்துல்லா முன்னிலையில் விசாரனைக்காக நேற்று வியாழக்கிழமை எடுக்கப்பட்டபோது இவ் வழக்கில் ஏற்கனவே கட்டளை விடுக்கப்பட்டிருந்தது.

அதாவது மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு மனித புதைகுழியிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் ஏற்கனவே அனுராதபுரம் வைத்தியசாலையில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.

இதன் எச்சங்களின் மாதிரிகளை எடுத்து சீ 14 காபன் பரிசோதனைக்கு அமெரிக்கா புளோரிடா நிறுவனத்துக்கு காபன் பரிசோதனைக்காக கொண்டு செல்வதற்கு மாதிரி தெரிவு செய்வதற்கான கட்டளை விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வழக்கு தொடுனர்களால் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைவாக கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களிலிருந்து மாதிரிகளை தெரிவு செய்வதற்கான நடைமுறைகளை அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் மேற்பார்வை செய்து அதற்கான மாதிரிகளை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன் பாரப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அரச தரப்பினரால் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதாவது இதற்கான அனுமதியை  நீதிபதி  வழங்க வேண்டும் என்று  கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கமைய இதன் அனுமதிக்கான விண்ணப்பத்தில் நீதவான் கையொப்பம் இட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் அரச தரப்பு சட்டதரணிகளால் மார்கழி மாதம் 5 ஆம் திகதி சமர்ப்பணம் ஒன்று சமர்பிக்கப்பட இருக்கின்றது.

அத்தோடு இவ் வழக்கானது இதன் நடவடிக்கைக்காக மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 9 ஆம்  திகதி மீண்டும் அழைக்கப்பட இருக்கின்றது என்றார்.

இவ் வழக்கில் அரசு தரப்பு சார்பாக சமந்த விக்கிரமசிங்க , இவ் மனித புதைகுழி அகழ்வுக்கு தலைமைதாங்கி ஈடுபட்ட சட்ட வைத்திய அதிகாரி வைத்தியரத்தின மற்றும் ஹேவகே ஆகியோருடன் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த குற்ற புலனாய்வு பிரிவினரும் மன்றில் ஆஜராகி இருந்தனர்.

அத்தோடு காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் சார்பில் சட்டத்தரணி எஸ் புராதினியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன் ஆகியோரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயப் பகுதியிலிருந்து மாந்தை பகுதிக்கு நிலத்தடியின் ஊடாக குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தில் ஆலய வீதிக்கு அருகாமையில் 2013 ஆம் ஆண்டு நீர் வழங்கல் சபையினால் குழாய்கள் பதித்துச் சென்றபோதே இவ் மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50