பொது போக்குவரத்து முறைமையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றினை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நியமித்துள்ளார்.

3 பேர் அடங்கிய குறித்த குழு  பொது போக்குவரத்து முறைமையில்  காணப்படும் சிக்கல்களை ஆராய்வதுடன், அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமென தெரிவிக்கப்படுகின்றது.