வேதிப்பொருட்களால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்

By Ponmalar

25 Nov, 2022 | 01:17 PM
image

பொதுவாக நாம் உண்ணும் உணவில் இருந்தும் சுற்றுச்சூழலில் இருந்தும் வேதிப்பொருட்கள் நாள்தோறும் நம் உடலை வந்தடைகின்றன.

அவற்றில் குறிப்பிடத்தக்க அளவு உடலின் கழிவு நீக்க அமைப்பு மூலம் வெளியேற்றப்படுகின்றன. ஆனால், குழந்தைகளின் உடலில் கழிவு நீக்க அமைப்பு முழு வளர்ச்சி அடையாத நிலையில் உள்ளதால், தேவையற்ற நச்சு வேதிப்பொருட்களை கழிவாக வெளியேற்ற முடிவதில்லை. 

எனவே, இந்த வேதிப்பொருட்களால் பெரியவர்களைவிட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளின் உடலை அடையும் வேதிப்பொருட்களின் பாதிப்புகள் உடனடியாக குழந்தையாக இருக்கும்போதே வெளிப்பட்டு விடுவதில்லை.

நம்மைவிட குழந்தைகளின் எதிர்காலம் நீண்டது. அதனால் பின்விளைவுகள் காலம் தாழ்த்தி, அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் வெளிப்படலாம். 

நாம் பெரியவர்களான பிறகு எதிர்கொள்ளும் புற்றுநோய், மூளை பாதிப்பு, இனப்பெருக்க குறைபாடுகள் போன்றவற்றுக்கான காரணங்களை, தாயின் கருவில் நாம் வளரத்தொடங்கிய காலத்தில் இருந்தே தேட வேண்டியுள்ளது. 

குழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கத்தைவிட கருவில் இருக்கும்போதும் சிசு வளர்ச்சியின்போதும் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் ஆபத்தானவை என்பதை வொஷிங்டனை சேர்ந்த சுற்றுச்சூழல் பணிக்குழு என்ற அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

வளர்ந்த மனிதன் வேதிமாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகளைவிட குழந்தைகள் வேதி மாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகள் கடுமையானவை. நீண்டகாலப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.

குறிப்பாக அவர்களுடைய முதிர்ச்சியடையாத மூளை, எளிதில் பாதிக்கப்படக்கூடியது. குழந்தைகளின் உடலில் வேதி கூட்டுப்புரதங்கள் குறைவாக இருப்பதால், வெளியிலிருந்து உள்ளே வரும் வேதி மாசுகளை வரவேற்கும் நிலையில் அவர்களுடைய உடல் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அப்படி உள்ளே வரும் நஞ்சுகள், அவற்றுக்கான இலக்கு உறுப்புகளை அடைந்து அவற்றை எளிதாக நாசம் செய்கின்றன. பெட்ரோலிய பொருட்களை எரிப்பதாலும், குப்பையை எரிப்பதாலும் வெளியிடப்படும் பி.ஏ.எச். எனப்படும் பலபடியாக்க அரோமட்டிக் ஹைட்ரோகாபன்கள், உண்ணும் உணவின் மூலம் தாயை அடைந்து தாயின் வயிற்றில் வளரும் கருவை அடைகிறது. இவை குழந்தைகளில் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எடையைக் குறைக்க உதவும் புளி

2022-12-09 16:08:38
news-image

கொழுப்பு எனும் கொலஸ்ட்ராலை சமநிலையில் ஏன்...

2022-12-09 11:49:18
news-image

அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை குறைக்கும் வழிகள்

2022-12-08 17:24:37
news-image

மெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா?

2022-12-08 13:33:20
news-image

பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து பானங்கள் அவசியமா..?

2022-12-08 11:57:37
news-image

12 வயதுக்குட்பட்ட சிறார்களிடம் அதிகரிக்கும் இரத்த...

2022-12-07 12:58:11
news-image

துரித உணவுகள் எவ்வாறான தீமைகளை உண்டாக்கும்...

2022-12-06 16:54:04
news-image

முதியவர்களை தாக்கும் இரத்த புற்றுநோய் பாதிப்பிற்குரிய...

2022-12-06 11:17:41
news-image

ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவது எப்படி...?

2022-12-05 11:57:29
news-image

முட்டை உண்பதால் அறிவாற்றல் அதிகரிக்கிறதா ?...

2022-12-04 18:48:05
news-image

உடல் எடையை குறைக்க உதவும் 'அட்கின்ஸ்...

2022-12-03 17:22:02
news-image

வலிகளை குறைக்க உதவும் 'ஹொட், ஐஸ்...

2022-12-03 15:58:14