முல்லைத்தீவில் மாவீரர் வாரத்தில் வர்த்தக நிலையங்களின் முன்பாக சிவப்பு மஞ்சள் கொடிகளை கட்டிய வர்த்தகர்கள் தொடர்பில் விசாரணை !

Published By: Vishnu

25 Nov, 2022 | 12:30 PM
image

கே .குமணன்

மாவீரர் நாள் எதிர்வரும் நவம்பர் 27 அன்று நடைபெறவுள்ள நிலையில் முல்லைத்தீவு நகரில் உள்ள தமது வர்த்தக நிலையங்கள் முன்பாக சிவப்பு மஞ்சள் தமிழ் தேசிய கொடிகளை கட்டி நினைவேந்தல் வார்த்தை அனுஷ்டிக்க தயாராகிவரும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

முல்லைத்தீவு சந்தை பகுதி மற்றும் கடற்கரை வீதி ஆகிய வீதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் இவ்வாறு கொடிகள் கட்டப்பட்டு வர்த்தகர்கள் நினைவு நிகழ்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

மாவீரர் வாரம் என்பது எமது உறவுகளை மனதிருத்தி அவர்களுக்கு அஞ்சலிக்கும் முகமாக எமது வர்த்தக நிலையங்கள் முன்பாக சிவப்பு மஞ்சள் கொடிகளை கட்டி நாம் ஏற்பாடுகளை மேற்கொண்டநிலையில் எமது வர்த்தக நிலையத்துக்கு வருகைதந்த புலனாய்வாளர்கள் எமது வர்த்தக நிலையத்தை புகைப்படம் எடுத்து சென்றுள்ளதோடு அருகில் உள்ள வர்த்தகர்களிடம் எமது குடும்ப விபரம் போன்ற எம்மைப்பற்றிய தகவல்களை கேட்டு வினவியுள்ளனர்.

மாவீரர் நாளுக்கு அஞ்சலி செலுத்தும் எம்மை அச்சுறுத்துவதன் ஊடாக ஏனைய வர்த்தகர்களையும் பயப்பீதிக்குள் வைத்திருப்பதற்கும் அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்கும் இவ்வாறான முறையில் புலனாய்வாளர்கள் செயற்படுகின்றனர்.

இருந்தபோதிலும் எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாது நாம் எமது உறவுகளுக்கு நவம்பர் 27 அன்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துவோம். எனவும் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் பேசாலையில் வாள் வெட்டு ;...

2024-05-25 11:32:28
news-image

சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு...

2024-05-25 11:29:53
news-image

பமுனுகம கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில்...

2024-05-25 11:20:49
news-image

நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் : சாரதிகளுக்கு...

2024-05-25 10:50:35
news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

2024-05-25 11:22:37
news-image

மல்வானையில் வயலிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள்...

2024-05-25 11:26:18
news-image

அத்துருகிரிய - கொட்டாவ பகுதி பாலத்திலிருந்து...

2024-05-25 11:34:00
news-image

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பெண்களுக்கான சிறப்பு...

2024-05-25 10:21:52
news-image

களுத்துறை துப்பாக்கிச் சூடு ; மூவர்...

2024-05-25 10:02:02
news-image

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர்...

2024-05-25 10:24:45
news-image

கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலை ஒன்றில் தீ...

2024-05-25 09:40:05
news-image

இன்றைய வானிலை

2024-05-25 06:48:49