4 இளம் பெண்கள் தன்னை கடத்தி, வல்லுறவுக்குட்படுத்தியாக இளைஞன் முறைப்பாடு: பஞ்சாப் பொலிஸார் விசாரணை

By Sethu

25 Nov, 2022 | 11:29 AM
image

4 இளம்பெண்கள் தன்னைக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர் என இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக பஞ்சாப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப்பின் ஜலந்தர் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20-25 வயது மதிக்கத்தக்க 4 யுவதிகள் தன்னை காரில் கடத்தி சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இளைஞர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பொலிஸில்  மேற்படி இளைஞர் அளித்துள்ள முறைப்பாட்டில் 'பஞ்சாப் ஜலந்தர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) தொழிற்சாலையில் வேலை முடித்து வீடு சென்று கொண்டிருந்தேன். கபுர்தலா வீதியில் செல்லும்போது, என்னை நோக்கி ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்த இரு இளம்பெண்கள் ஒரு துண்டு சீட்டைக் கொடுத்து அதிலுள்ள முகவரி குறித்து கேட்டனர்.

அந்த துண்டு சீட்டை  நான் வாசிக்க முற்பட்ட போது, என் மீது மயக்க மருந்து ஸ்பிறெ அடித்தனர், அதன் பிறகு நான் சுயநினைவு இழந்துவிட்டேன். 

மீண்டும் எழுந்து பார்க்கையில் ஒரு காட்டுப் பகுதியில் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு, என் கை, கால்களை கட்டி போட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர்' என தெரிவித்துள்ளார். இந்த இளைஞர் 20-30 வயதுக்கிடைப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யுவதிகள் நால்வரும்  அப்போது மதுபோதையில் இருந்ததாகவும் தன்னையும் மது அருந்துதற்கு அவர்கள் வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு 4 இளம்பெண்களும் தன்னை மாறி மாறி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர் எனவும் அவர்  தெரிவித்துள்ளார். 

பின்னர், மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தன்னை கை, கண்களை கட்டி இறக்கிவிட்டு அப்பெண்கள் சென்றதாகவும் இளைஞர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த பெண்கள் செல்வந்த போல இருந்தனர் எனத் தெரிவித்துள்ளார். அவர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டனர் எனவும் தன்னுடன்  பஞ்சாபி மொழியில் பேசினர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இம்முறைப்பாட்டையடுத்து, குறித்த  பஞ்சாப் பொலிஸ் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம்...

2022-12-09 16:53:21
news-image

பாதுகாப்பு, மீட்பு பணியில் 16,000 போலீசார்:...

2022-12-09 16:48:41
news-image

பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் இணைந்து நவீன...

2022-12-09 15:40:44
news-image

ஈரானில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பெண்களின் முகங்களையும்...

2022-12-09 15:34:50
news-image

புர்கா அணிந்து நடனமாடிய 4 ஆண்...

2022-12-09 13:22:54
news-image

சீனாவில் மாணவர்கள் போராட்டம்

2022-12-09 13:27:25
news-image

ரஷ்ய வணிக வளாகத்தில் கால்பந்து மைதானம்...

2022-12-09 12:30:43
news-image

'அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுங்கள்'...

2022-12-09 13:19:06
news-image

இலங்கை இனப்படுகொலை: இந்தியா வாக்களிக்காததன் காரணம்...

2022-12-09 12:09:58
news-image

ஐரோப்பிய எல்லைகளில் குடியேற்றவாசிகள் முன்னர் ஒருபோதும்...

2022-12-09 11:56:20
news-image

ஒரு பாலினத் திருமணங்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்...

2022-12-09 11:49:09
news-image

இந்தியாவில் திருமண நிகழ்வில் எரிவாயு சிலிண்டர்கள்...

2022-12-09 11:17:28