மட்டக்களப்பு வந்தாறுமூலையில் வைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது தாக்குதல் நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்தபோது கிழக்கு பல்கலைக்கழக பஸ் தரிப்பிடத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்து குறித்த பஸ் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

பஸ்ஸின் பின்புற கண்ணாடி உடைந்துள்ளது. குறித்த இடத்திற்கு ஏறாவூர் பொலிசார் வருகைதந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.