வெஜ் ஸ்ப்ரிங்ரோல்

By Devika

25 Nov, 2022 | 02:07 PM
image

தேவையான பொருட்கள்

ஸ்ப்ரிங்ரோல் சீட் - 1 பெக்கட்

கெரட் - 1

குடைமிளகாய் - பாதி

கோவா - ¼ கப்

பெரிய வெங்காயம் - 1

வெங்காயத் தாள் - 2

வெ.பூண்டு - 5 பல்

சோயா சோஸ் - 1 ஸ்பூன்

மிளகு தூள் - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மைதா மாவு - 2 ஸ்பூன்

எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை

கெரட், குடைமிளகாய், கோவா மூன்றையும் பொடியாக நீளவாக்கில் நறுக்கவும். வெங்காயத்தாள், வெங்காயம், வெ.பூண்டு மூன்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி வெ. பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கிய பின் கெரட், முட்டைகோஸ், குடைமிள­காய் சேர்க்கவும். காய்கள் வதங்கியவுடன் சோயாசோஸ், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கி வெங்காயத்தாள் சேர்க்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து வதங்கியவுடன் மிளகு தூள் சேர்த்து இறக்கி ஆறவைக்கவும்.

மைதா மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்போல் கலக்கி வைக்கவும். ஸ்ப்ரிங்ரோல் சீட்டின் ஒரு ஓரத்தில் சிறிதளவு காய்கறி கலவை வைத்து ரோல் செய்து ஓரங்களை பேஸ்ட்டால் ஒட்டவும். எல்லாவற்றையும் செய்து 5 நிமிடம் வைக்கவும். 

வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். காய்கறி சாப்பிடப் பிடிக்காத குழந்தைகளுக்கு இதுபோல் செய்து கொடுக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right