சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்களோடு வர்த்தக ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட கொமர்ஷல் வங்கி

By Digital Desk 5

25 Nov, 2022 | 11:42 AM
image

கடல்கடந்து வாழும் மற்றும் தொழில்புரியும் இலங்கையர்களிடமிருந்து உள்நாட்டுக்கு பணத்தை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் கொமர்ஷல் வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்றது. 

அந்த வகையில் அண்மையில் சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது. புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மீது வங்கி கவனம் செலுத்தி இங்கு இரண்டு நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன. சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஒத்துழைப்போடு இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. 

முறைசார் வழிகள் மூலம் பணத்தை அனுப்புவதற்கான சேனல்கள் குறித்தும் இதன் மூலம் கிடைக்கும் தனிப்பட்ட மற்றும் தேசிய நன்மைகள் பற்றியும் இங்கு விளக்கம் அளிக்கப்பட்டது. விஷேட நாணயமாற்று ஐதம் மற்றும் பரிசுகள் என்பனவும் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டன.

சிங்கப்பூரில் வாழும் இலங்கையர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே இந்நிகழ்ச்சியை நடத்தியதாக வங்கி அறிவித்துள்ளது. 

அதற்கமையவே விஷேட நாணயமாற்று ஐதங்கள் வழங்கப்பட்டதோடு, வங்கியின் ஏனைய உற்பத்திகள் மற்றும் சேவைகள், மற்றும் கொம்பாங்க் டிஜிட்டல் முறை பற்றியும் இங்கு தெளிவுப்படுத்தப்பட்டது. 

வங்கியின் பிரதான நாணயமாற்று பங்காளிகளில் ஒருவரான றியா பணப்பரிமாற்று (Ria Money Transfer) சேவை, சிங்கப்பூரில் பெண்களுக்கான பிரத்தியேகமாக நடமாடும் தொலைபேசி வங்கி செயலியான லூசி, என்பன பற்றிய ஊக்குவிப்பும் இங்கு இடம்பெற்றது.

நிகழ்வின் இரண்டு நாட்களிலும் இலங்கையர்களின் புதிய 100 கணக்குகள் திறக்கப்பட்டன. அத்தோடு இணைப்புக் கட்டணம் மற்றும் 1 வது வருடத்திற்கான வருடாந்திர கட்டணமின்றி டிஜிட்டல் வங்கிச் சேவை வசதிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த வைபவத்தில் பேசிய சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் சஷிகலா பிரேமவர்தன, இந்த முயற்சி ஒரு ஆரம்பம் மட்டுமே. இங்கு வாழும் இலங்கையர்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தின் மூலம் இலங்கை பொருளாதாரத்துக்கு உதவக் கூடிய இன்னும் பல திட்டங்களை நாம் மேற்கொள்ளலாம் என்று கூறினார்.

சிங்கப்பூரில் இவ்வாறான ஒரு நிகழ்வை நடத்துவதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட போது அதை விரைவாக ஏற்று துரிதமாகச் செயற்பட்ட கொமர்ஷல் வங்கிக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். “சிங்கப்பூரில் கடினமாக உழைக்கும் எமது இலங்கையர்களுக்கு உதவ வேண்டியது எமது கடமையாகும்” என்று அவர் மேலும் கூறினார்.

“இலங்கையில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு வங்கி என்ற வகையில் இலங்கைக்கு தமது பணத்தை அனுப்பி வைக்கும் விடயத்தில் இலங்கையர்களை ஊக்குவிக்கும் விடயத்தில் நாம் பிரதான பங்கு வகிக்க வேண்டி உள்ளது” என்று கூறினார் வங்கியின் சில்லறை உற்பத்திகள் மற்றும் டிஜிட்டல், சேனல்கள் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புதல் ஆகிய பிரிவின் தலைவர் பிரதீப் பந்துவன்ஸ.

“இவ்வாறான நிகழ்வுகள் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பி வைக்கப்படுவதை ஊக்குவிக்கும், நாட்டுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நன்மைகளை வழங்கும் வகையில் அது அமைந்திருக்கும்” என்று அவர் மேலும் கூறினார். 

இலங்கையின் முதல் 100% கார்பன் பாவனையினை குறைத்த வங்கி, உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் தொடர்ந்தும் 12 வருடங்களாக பட்டியலிடப்பட்ட ஒரேயொரு இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி வலையமைப்பினைக் கொண்ட 268 கிளைகள் மற்றும் 940 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது.

கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது, அங்கு வங்கி 19 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது:

படவிளக்கம் : இலங்கை உயர் ஸ்தானிகர் சஷிகலா பிரேமவர்தன (மேலே) மத்தியில் கொமர்ஷல் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவக் குழு மற்றும் இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலக உயர் மட்ட குழு ஆகியோர் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் காணப்படுகின்றனர். (கீழே) வங்கியின் பிரதிநிதிகளுக்கும் சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்கள் சிலருக்கும் இடையிலான கலந்துரையாடல் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அபிவிருத்தி லொத்தர் சபையின் 'வலம்புரி' 20...

2022-12-09 21:06:54
news-image

மென்மையான மற்றும் மகிழ்வூட்டும் சருமத்திற்கு வெல்வெட்...

2022-12-07 12:44:34
news-image

Elegance, Excelsior ஆகிய இரு விசேட...

2022-12-05 14:38:29
news-image

60 ஆவது ஆண்டில் Vogue Jewellers

2022-12-02 17:28:58
news-image

MARLBO வருட இறுதி மலிவு விற்பனை

2022-11-28 17:14:01
news-image

சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்களோடு வர்த்தக ஊக்குவிப்பு...

2022-11-25 11:42:45
news-image

சர்வதேசத்தை ஈர்த்த லின்க் நெசுரல் Race...

2022-11-23 09:58:58
news-image

பிராந்திய கடன் பிரிவுகளுக்கான மக்கள் வங்கியின்...

2022-11-22 15:25:50
news-image

22 ஆவது வருடாந்த பொருளாதார உச்சி...

2022-11-22 14:44:38
news-image

விவசாயக் குடும்பங்களின் அடுத்த தலைமுறையை ஊக்குவாக்கும்...

2022-11-21 21:14:46
news-image

10 ஆவது ஆண்டு நிறைவு விழாவைக்...

2022-11-21 16:07:24
news-image

பொது சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தொலைத்தொடர்பு தீர்வுகளை...

2022-11-18 16:19:40