ஆளுமையை வெளிப்படுத்தும் 'மேக்கப்'

By Devika

25 Nov, 2022 | 11:02 AM
image

‘ஒப்பனை’ என்பது தோற்றத்தை அழகாக எடுத்துக்காட்டுவது மட்டுமல்ல. நீங்கள் விரும்பும் விதத்தில் உங்களை உருவாக்குவதும் தான். நாம் போடும் மேக்கப்பை, நமது ஆளுமையை வெளிப்­படுத்தும் கருவியாக மாற்றுவது எவ்வாறு என்பதைப் பற்றி பார்ப்போம்...

கண்கள்

கண்கள் மனதின் ஜன்னல்­கள். எனவே, கண்களைச் சுற்றி செய்யும் அலங்­­காரம், நமது மனதின் ஆழத்திலுள்ள சாயல்களை வெளிப்படுத்தும். பெரும்பாலான இளம்பெண்கள் அணியத் தொடங்கும் முதல் அழகுசாதனப் பொருள் கண் மை (காஜல்). கண்களுக்கு செய்யும் ஒப்பனைக்கு முகத்தை மாற்றும் சக்தி உள்­ளது. ஐ லைனர்கள் முதல் ஐ ஷெடோக்­கள் வரை, நீங்கள் விரும்பும் அழ­கான கண் தோற்றத்தை உருவாக்க உதவும். 

முகம்

கண்களுக்கு அடுத்து நாம் கவனம் செலுத்த வேண்டியது முகம்தான். லேசான மேக்கப் மட்டும் இருந்தாலே, முகத்தை அழகாக எடுத்துக் காட்டலாம். குறைவாக ஒப்பனை செய்யும்போது, முகம் பிரகாசமாக மட்டுமின்றி, தன்­னம்­­பிக்கையுடனும் வெளிப்படும். இதில், கவனிக்க வேண்டிய விஷயம், நம் சரும நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷனைத் தெரிவு செய்தல். இது முகத்தின் அழகை மெரு­கூட்டிக் காட்டும்.

லிப்ஸ்டிக்

முகத்தில், நாம் உதிர்க்கும் புன்னகையை தன்னம்பிக்கையுடன் வெளியே பிரதிபலிக்க உதட்டை அழகாக வைத்திருப்பது அவசியம். வறட்சியுடனோ, வெடிப்புடனோ உதடு இருந்தால், பல பாதிப்புகள் ஏற்படும். உதட்டை எப்போதும் மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைக்க ‘லிப் பாம்’ பயன்படுத்தலாம். ஒப்­பனைக்கேற்ப லிப்ஸ்டிக் நிறத்தைத் தெரிவு செய்யலாம். சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் தைரியத்தையும், தன்னம்­பிக்கை­யையும் அழ­காய் பிரதிபலிக்க முடியும். 

நகப்பூச்சு

நகங்களுக்கு நாம் தேர்ந்­தெடுக்கும் நகப்பூச்சு, நம் எண்ணங்களின் பிரதிபலிப்பாக மாறும். சிவப்பு நிறம் பூசும்போது, அது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருக்கும். உணர்ச்சிகளின் வெளிப்பாட்டுக்கு வானவில்லின் பிற நிறங்களைப் பயன்படுத்த­லாம். இந்த வண்ணக் குறியீடு, உங்கள் ஆற்றலின் அளவை வெளிப்படுத்தும். அழகு, ஒப்­பனை, தோல் பராமரிப்பு மற்­றும் சுய பாதுகாப்பு போன்­றவை பெண்களுக்கு முக்கிய­மானவை. ‘மேக்கப்’ நம் அழகை வெளிக்காட்ட உதவும் ஓர் ஆயுதம். இதனால், பெண்­கள் தங்களை சக்தி வாய்ந்தவர்களாக உணர முடியும். இது உங்களின் ஆளுமையை மீட்டெடுப்ப­தற்கான சிறந்த வழியும் ஆகும். மேக்கப்பை நாம் கவசமாகப் பயன்­படுத்தும்போது, நம்மைத் திறமையானவர்களாக வெளிக்­காட்ட முடியும். கச்­சிதமாக ஒப்பனை செய்வ­தற்கு நாம் செல­வழிக்கும் 10 நிமிடம் என்பது நமக்கான தியானம் போன்றது. பரபரப்­பான வாழ்க்கைச் சூழலில் இருக்கும் ஒருவர் தனக்காக சிறிது நேரம் ஒதுக்க ஒப்பனை சிறந்த வழியாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்