பாராளுமன்ற சுற்றுவட்டப்பகுதியில் கூட்டு எதிர்கட்சியின் ஆதரவாளர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளுராட்சிமன்ற தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி கூட்டு எதிர்கட்சியின் ஆதரவாளர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பாராளுமன்ற வீதி மூடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற சுற்றுப்புற வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.