கனவுகள் காண்பதும் கர்மாவா...?

Published By: Ponmalar

25 Nov, 2022 | 11:00 AM
image

எம்மில் பலரும் இரவில் உறங்கும் போது கனா காண்பார்கள். இது பெரும்பாலும் அனைத்து வயதினருக்கும், பாலின பேதமின்றி ஏற்படக்கூடிய விடயம். எனினும் சிலருடைய கனவுகள் நடைமுறையில் சத்தியமாவதும் உண்டு. சோதிட நூல்கள் நாம் காணும் கனவுகளுக்கும் பலன்களைச் சொல்லி இருக்கிறது. ஆனால் இதில் ஏராளமான தவறுதலான இடை செருகல்கள்  ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. கனவு காண்பது ஒவ்வொருவருடைய மனத்தின் அடுக்குகளில் பதிந்துள்ள சில இனம் கண்டறிய இயலாத விடயங்களின் வெளிப்பாடு என ஆன்மீக பெரியோர்கள் தெரிவிக்கிறார்கள்.

உளவியல் நிபுணர்கள் கனவு காண்பது சிலருக்கு ஆரோக்கியமான விடயம் என்றும், ஆனால் கனவின் தீவிர நிலை அதாவது கனவிற்கு முதன்மையான முக்கியத்துவம் கொடுத்தால், அது ஆரோக்கியத்திற்கு எதிரி என்றும் வலியுறுத்துகிறார்கள். பொதுவாக கனவு என்பது சிலருக்கு மட்டும் பூர்வ ஜென்ம தொடர்பினையும், சிலருக்கு அவர்களுடைய இந்த பிறவியின் கர்மாவை கழிப்பதற்கான ஒரு வழிமுறையாகவும் நிகழ்கிறது. இந்த நுட்பமான வேறுபாட்டினை துல்லியமாக அவதானிக்க வேண்டும் என ஆன்மீக அறிஞர்களும், ஜோதிட வல்லுநர்களும் குறிப்பிடுகிறார்கள்.

குறிப்பாக கும்ப ராசி, லக்னத்திற்கு எட்டாமிடம், கும்ப ராசியில் இருக்கும் கிரகங்களின் தசா புத்தி நடக்கும் காலகட்டம், பன்னிரெண்டாம் இடம் மற்றும் பனிரெண்டாம் இடத்திற்குரிய பாவகம், சிலருக்கு ராகு மற்றும் கேது கோச்சாரத்தில் இயங்கும்போது, குறிப்பிட்ட வீட்டின் மீதான பார்வை, குறிப்பிட்ட ராசிகளின் மீதான பார்வை.. ஆகியவற்றை அவதானித்தால் கனவு கர்மாவா? அல்லது வேறொன்றா? என்பதனை அவதானிக்க இயலும். அதே தருணத்தில் சிம்ம ராசி, விருச்சிக ராசி மற்றும் மீன ராசி ஆகிய மூன்று ராசியினருக்கும் வேறு வகையினதான கனவுகள் வரக்கூடும்.

இதில் கும்ப ராசியில் ஒரு கிரகம் இருந்து, அது திசை நடத்தும் போதும் அல்லது கும்ப ராசிக்கான ராசி அதிபதி தொடர்பு காரணமாகவும் கனவுகள் ஏற்படும். இவை பெரும்பாலும் பூர்வ ஜென்ம தொடர்புடைய கனவுகளாகவே இருக்கும். எனவே இவர்கள் கனவுகளை தொடர்ச்சியாக அவதானித்தால், பூர்வ ஜென்மம் பற்றிய ஒரு புரிதலும் கிடைக்கும். அது இந்த ஜென்மத்தில் விரும்பியோ விரும்பாமலோ கனவாக கண்டு, கழிக்க வேண்டிய கர்மாவா? இல்லையா? என்பதையும் உணரலாம்.

பொதுவாக கனவுகளுக்கு முன்னுரிமையோ, உயிர்ப்பினையோ வழங்கக் கூடாது என முன்னோர்கள் வலியுறுத்திச் சென்றிருக்கிறார்கள். ஏனெனில் கனவுகள் பல்வேறு அடுக்கிணை கொண்டது. சில கனவுகள் அமானுஷ்யமாகவும், சில கனவுகள் எதிர் நிலையான விடயங்களையும், சில கனவுகள் உடனிருப்பவர்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாகவும் இருக்கும். மேலும் சில கனவுகள் ஒரு வாரம் கழித்தோ... ஒரு மாதம் கழித்தோ அல்லது ஓராண்டு கழித்தோ... நனவாகலாம். அத்தகைய தருணங்களில் நாம் கண்ட கனவு பலித்து விட்டதே..! என்ற எண்ணம் எம்முள் ஏற்பட்டு, அவை ஆயுள் முழுவதும் ஒரு வகையினதான அச்ச உணர்வை மனதின் அடியாழத்தில் ஏற்படுத்திவிடும்.

சிலருக்கு கனவுகளுடன் அசரீரி போல் குரல் மட்டுமே கேட்கும். இதனாலும் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிம்ம ராசியில் பாவ கிரகங்களுடன் தொடர்புடையவர்களாகவோ அல்லது சிம்ம ராசியில் பாவ கிரகங்கள் இருந்து அவற்றை அசுபர்கள் பார்வையிட்டாலோ.. இவர்களின் தொடர்பு கோச்சார புள்ளியில் இணைந்தாலோ.. அவர்கள் மன சுழற்சியில் சிக்கி இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என சோதிட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதே தருணத்தில் எம்முடைய ஜாதகத்தில் பன்னிரெண்டாம் இடம் அயன ஸ்தானம். இந்த இடத்தில் ராகு, கேது, சனி ஆகியோரின் தொடர்பு இருந்தாலும் அல்லது பார்வை பெற்றாலும்.. அமானுஷ்யமான கனவுகளை காண்பர். இத்தகைய கனவுகள் 99 சதவீதம் நனவாகாது. இதனை ஒரு கர்மாவாக நினைத்து கடந்து சென்று விட வேண்டும்.

களவு காண்பதில் இரண்டு வகை உண்டு. சுபமான கனவுகளையும், மகிழ்ச்சி தரும் கனவுகளையும் காண்பது ஒரு வகை. கனவு கண்டுகொண்டிருக்கும்போதே அதன் பயங்கரத்தை தாங்க இயலாமல் திடுக்கென உறக்கத்திலிருந்து எழுந்து, கனவு என்பது உணர்வது மற்றொரு வகை. சுபமான கனவு காண்பதை அனுபவித்து மகிழுங்கள். துயர சம்பவங்களை மையப்படுத்திய கனவுகளை காணும் போது, அதற்காக பதற்றப்படாமல் மனதினை விழிப்பு நிலையில் வைத்துக் கொண்டு, கவலைப்படாமல் இயல்பாக இருங்கள். ஏனெனில் இத்தகைய அமானுஷ்யமான கனவுகள் இந்த ஜென்மத்தில் நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் கர்மாவின் சுமையை, இறையருள், பெற்றோர்களின் ஆசி, குலதெய்வத்தின் அருள் போன்றவற்றின் காரணமாக நீங்கள் குறைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே கனவு காண்பதும் கர்மாவை கழிப்பதற்கான உத்தி என்பதனை  உணர்ந்து கொள்ளுங்கள்.

இனிமேல் கனவு கண்டால் அதற்கான பலன்கள் என்ன என்று இணையத்தில் தேடாதீர்கள். அது நம் கர்மாவின் சுமையை குறைப்பதற்கான ஒரு வழிமுறை என்று எளிதாக இயல்பாக கடந்து செல்லுங்கள்.

சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வணிகம் பெருக மேற்கொள்ள வேண்டிய எளிய...

2024-09-17 15:23:32
news-image

கல்வியில் தடையை அகற்றும் இறை வழிபாட்டுப்...

2024-09-17 09:34:38
news-image

முன்னோர்களின் ஆசியை பரிபூரணமாக பெறுவதற்கு செய்ய...

2024-09-14 16:38:56
news-image

கடன் பிரச்சினை தீர்வதற்கான பண வரவிற்குரிய...

2024-09-14 16:38:22
news-image

வெற்றி பெறுவதற்கான நட்சத்திர சூட்சமம்...!?

2024-09-12 16:40:45
news-image

கண்டாந்திர நட்சத்திர தோஷமும், பரிகாரமும்

2024-09-11 17:16:39
news-image

தலைமுறை பாவங்களை நீக்கும் மந்திர உச்சாடன...

2024-09-10 14:45:36
news-image

குலதெய்வ சாபத்தை நீக்குவதற்கான பிரத்தியேக வழிபாடு..?

2024-09-09 15:57:29
news-image

அதிர்ஷ்டம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்?

2024-09-04 18:11:19
news-image

செல்வ வரவை மேம்படுத்தும் எளிய பரிகாரங்கள்...!?

2024-09-03 15:08:38
news-image

ராகு தோஷ பரிகாரங்கள்..!?

2024-09-02 20:26:56
news-image

செல்வ வளம் குவிய மேற்கொள்ள வேண்டிய...

2024-08-31 18:51:29