நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்து ; மூவர் பலி ; நால்வர் காயம்

By Digital Desk 5

25 Nov, 2022 | 10:37 AM
image

நாடளாவிய ரீதியில் நேற்று (24) நாட்டில் இடம்பெற்ற பல்வேறு வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை காலை அங்கும்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தளை ஓவிலிகந்த பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியும் பின் இருக்கையில் பயணித்த ஒருவரும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின் இருக்கையில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.

மாத்தளையைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, நேற்று இரவு கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெம்மாதகம கம்பளை வீதியில் அம்புலுவாவ 5ஆம் கந்தலுக்கு அருகில் ஹெம்மாதகமவிலிருந்து கம்பளை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வீட்டு கூரையின் மீது உருண்டு விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பின் இருக்கையில் பயணித்த ஆண் ஒருவரும், இரு பெண்கள் மற்றும் சிறு குழந்தையொன்றும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபர் ஹெம்மாதகம பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலந்தாவ வீதியின் ஏழாவது கந்தலுக்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் 41 வயதான முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார். வேகத்தை கட்டுப்படுத்தாமல் கவிழ்ந்தது.

இவர் வெலிகும்புர பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பௌத்த அறக் கொள்கையை பேணும் சிங்களவர்களை...

2022-11-28 21:07:19
news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38