ரைனிட்டிஸ் மெடிகமென்டோசா எனும் மூக்கடைப்பு பாதிப்பிற்கான காரணங்களும், சிகிச்சைகளும்...

By Ponmalar

25 Nov, 2022 | 10:44 AM
image

பருவநிலை மாற்றங்களின் காரணங்களாலும், ஒவ்வாமை காரணங்களாலும் எம்மில் பெரும்பாலானவர்களுக்கு மூக்கடைப்பு பாதிப்பு ஏற்படுகிறது. இதன் போது மருத்துவர்களின் பரிந்துரை இன்றி சந்தையில் கிடைக்கும் களிம்பு, தைலம், சொட்டு மருந்து மற்றும் ஸ்பிரே வடிவிலான நிவாரணிகளை நாமே தெரிவு செய்து பயன்படுத்துகிறோம். அதிலும் பலர் இதனை பயன்படுத்துவதை பழக்கப்படுத்தியும் கொண்டிருப்பர். இத்தகைய வலி நிவாரணிகளை குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக பயன்படுத்துவோர்களுக்கு இதுவே மூக்கடைப்பு பாதிப்பை மீண்டும் மீண்டும் உருவாக்கக்கூடும். இந்த நிலையை தான் மருத்துவர் துறையினர் ரைனிடிஸ் மெடிகமென்டோசா என குறிப்பிடுகிறார்கள்.

சளி தொல்லை, காய்ச்சல், ஒவ்வாமை போன்ற எந்த அறிகுறிகளும் இல்லாமல், உங்களுக்கு மூக்கடைப்பு அடிக்கடி ஏற்படுகிறது என்றால், அது ரைனிடிஸ் மெடிகமெண்டாசோ என மருத்துவர்கள் வகைப்படுத்துகிறார்கள். இத்தகைய பாதிப்பு யாருக்கு ஏற்படுகிறது என அவதானித்தால், மூக்கடைப்பு பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவர்களின் பரிந்துரையின்றி எம்முடைய நாசி பகுதிகளுக்குள் நேரடியாக செலுத்திக் கொள்ளும் ஸ்பிரே, சொட்டு மருந்து, களிம்பு ஆகியவற்றைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் பயன்படுத்துவர்களை பாதிக்கிறது. அதாவது மூக்கடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர்களின் ஆலோசனையுடன் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை தற்காலிகமாக நிவாரணம் அளிக்கும் இத்தகைய ஸ்பிரேக்கள், சொட்டு மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். அதனை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் எனில் மருத்துவர்களின் ஆலோசனையும், பரிந்துரையும் அவசியம். இதனை தவிர்த்து, மூக்கடைப்பு ஏற்படும் போதெல்லாம் இத்தகைய நிவாரணிகளை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, மூக்கடைப்பு பாதிப்பு வேறு வகையில் ஏற்படுகிறது. மேலும் இதன் போது மூக்கில் சதை வளர்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறும் உண்டாகிறது. சிலருக்கு கண், காது, தொண்டை ஆகிய பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

தொடர்ச்சியாக ஸ்பிரேக்கள், சொட்டு மருந்துகள் போன்றவற்றை நாசிப் பகுதிக்குள் பயன்படுத்துவதால், அங்கு நமைச்சல் ஏற்படும். ரன்னிங் நோஸ் எனப்படும் மூக்கு ஒழுகுதல், தொடர் தும்மல், மூக்கடைப்பு போன்றவை ஏற்பட்டால் அவை ரைனிடிஸ் மெடிகமென்டோசா பாதிப்பின் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.

இதற்கு உரிய தருணத்தில் மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். மருத்துவர் வேறு வகையான மருந்து மற்றும் ரசாயன கலப்பில்லாத ஸ்பிரேக்களை பயன்படுத்த பரிந்துரைப்பார். இதன் மூலம் பாதிப்பின் தன்மை குறைந்து, மூக்கடைப்பு பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும். இதை புறக்கணித்தோ அல்லது அலட்சியப்படுத்தியோ தொடர்ந்து ஸ்பிரேக்கள், இன்ஹேலர்கள், சொட்டு மருந்துகள்... போன்றவற்றை முக்கடைப்பு பாதிப்பிற்காக எடுத்துக் கொண்டால், அப்பகுதியில் பாலீப் எனப்படும் சதை உருவாகி, அதனை அகற்ற சத்திர சிகிச்சை அவசியப்படலாம்.

டாக்டர் வேணுகோபால்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எடையைக் குறைக்க உதவும் புளி

2022-12-09 16:08:38
news-image

கொழுப்பு எனும் கொலஸ்ட்ராலை சமநிலையில் ஏன்...

2022-12-09 11:49:18
news-image

அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை குறைக்கும் வழிகள்

2022-12-08 17:24:37
news-image

மெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா?

2022-12-08 13:33:20
news-image

பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து பானங்கள் அவசியமா..?

2022-12-08 11:57:37
news-image

12 வயதுக்குட்பட்ட சிறார்களிடம் அதிகரிக்கும் இரத்த...

2022-12-07 12:58:11
news-image

துரித உணவுகள் எவ்வாறான தீமைகளை உண்டாக்கும்...

2022-12-06 16:54:04
news-image

முதியவர்களை தாக்கும் இரத்த புற்றுநோய் பாதிப்பிற்குரிய...

2022-12-06 11:17:41
news-image

ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவது எப்படி...?

2022-12-05 11:57:29
news-image

முட்டை உண்பதால் அறிவாற்றல் அதிகரிக்கிறதா ?...

2022-12-04 18:48:05
news-image

உடல் எடையை குறைக்க உதவும் 'அட்கின்ஸ்...

2022-12-03 17:22:02
news-image

வலிகளை குறைக்க உதவும் 'ஹொட், ஐஸ்...

2022-12-03 15:58:14