டுவிட்டரில் முடக்கப்பட்ட கணக்குகளுக்கு மீண்டும் அனுமதி : மன்னிப்பு வழங்குவதாக இலோன் மஸ்க் அறிவிப்பு

By Sethu

25 Nov, 2022 | 10:18 AM
image

டுவிட்டரில் முடக்கப்பட்டிருந்த பல கணக்குகள் மீண்டும் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைவர் இலோன் மஸ்க்  அறிவித்துள்ளார். 

கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றில், இத்திட்டத்துக்கு ஆதரவாக அதிகமானோர் வாக்களித்திருந்ததால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

 "Vox Populi, Vox Dei," என இன்று (25) வெளியிட்ட டுவிட்டர் பதிவொன்றில் இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த லத்தீன் பழமொழிக்கு மக்களின் குரலானது இறைவனின் குரலாகும் என அர்த்தமாகும்.

அடுத்த வாரம் முதல் மன்னிப்பு வழங்கல் ஆரம்பமாகும் என இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இலோன் மஸ்ககின் கருத்துக்கணிப்பில் 3.16 மில்லியன் பேர் பங்குபற்றியிருந்தனர். அவர்களில் 72.4 சதவீதாமனோர், இடைநிறுத்தப்பட்ட கணக்குகள், சட்டங்களை மீறாவிட்டால், அல்லது தேவையற்ற ஸ்பாம் தகவல்களை அனுப்புவதில் சம்பந்தப்படாவிட்டால் அக்கணக்குகளை மீள அனுமதிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கெனவே, நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றையடுத்து அவரின் டுவிட்டர் கணக்கு கடந்த சனிக்கிழமை மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரயில் நிலைய மேடைக்கும் ரயிலுக்கும் இடையில்...

2022-12-08 22:18:00
news-image

2022 இன் சிறந்த நபர் -...

2022-12-08 15:53:38
news-image

ஈரானில் மாஷா அமீனி ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு...

2022-12-08 14:06:43
news-image

இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் எழுச்சி

2022-12-08 13:03:39
news-image

குஜராத்தில் ஏழாவது முறையாக பாஜக வெற்றி

2022-12-08 12:54:27
news-image

சைபர் தாக்குதல் - இரண்டாம் உலக...

2022-12-08 12:44:14
news-image

குஜராத்தில் பாஜக, இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ்...

2022-12-08 12:59:04
news-image

பாலி குண்டுவெடிப்பு குற்றவாளி விடுதலை -...

2022-12-08 12:25:50
news-image

இந்திய விமானப்படையில் புதிய ஏவுகணை கட்டமைப்புடன்...

2022-12-08 13:42:48
news-image

2021-22 இல் இந்தியா 84.84 பில்லியன்...

2022-12-08 13:42:00
news-image

ரஷ்ய எண்ணெய் விலை வரம்பு :...

2022-12-08 13:40:58
news-image

ரயில் பாதை நடுவே சிக்கிக்கொண்ட மாணவி...

2022-12-08 11:54:06