சீனாவில் ஒரே நாளில் 32 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்று

By T. Saranya

25 Nov, 2022 | 11:08 AM
image

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,943 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சீனாவில் கடந்த சில நாட்களாக கொவிட் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அங்கு 31,656 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இது கடந்த பல மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு எண்ணிக்கை ஆகும். 

இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. புதிதாக 32,943 பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதில் 3,103 பேருக்கு அறிகுறிகள் உள்ளன. 29,840 பேருக்கு எந்தவித கொரோனா அறிகுறிகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்புகள் எதுவும் இல்லை. 

சீனாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருவது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் இதுவரை கொவிட் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,232 ஆகும். மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை 300,619 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம்...

2022-12-09 16:53:21
news-image

பாதுகாப்பு, மீட்பு பணியில் 16,000 போலீசார்:...

2022-12-09 16:48:41
news-image

பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் இணைந்து நவீன...

2022-12-09 15:40:44
news-image

ஈரானில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பெண்களின் முகங்களையும்...

2022-12-09 15:34:50
news-image

புர்கா அணிந்து நடனமாடிய 4 ஆண்...

2022-12-09 13:22:54
news-image

சீனாவில் மாணவர்கள் போராட்டம்

2022-12-09 13:27:25
news-image

ரஷ்ய வணிக வளாகத்தில் கால்பந்து மைதானம்...

2022-12-09 12:30:43
news-image

'அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுங்கள்'...

2022-12-09 13:19:06
news-image

இலங்கை இனப்படுகொலை: இந்தியா வாக்களிக்காததன் காரணம்...

2022-12-09 12:09:58
news-image

ஐரோப்பிய எல்லைகளில் குடியேற்றவாசிகள் முன்னர் ஒருபோதும்...

2022-12-09 11:56:20
news-image

ஒரு பாலினத் திருமணங்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்...

2022-12-09 11:49:09
news-image

இந்தியாவில் திருமண நிகழ்வில் எரிவாயு சிலிண்டர்கள்...

2022-12-09 11:17:28