டொனால்ட் ட்ரம்ப் தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக ஊடகவியலாளர் வழக்கு

By Sethu

25 Nov, 2022 | 09:38 AM
image

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தி, ஊடகவியலாளர் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ஜீன் கரோல் எனும் பெண், நியூ யோர்க் மாநில நீதிமன்றமொன்றில்  வியாழக்கிழமை (24) இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். 

1990களின் மத்தியில் டொனால்ட் ட்ரம்ப் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என ஈ.ஜீன் கரோல் தெரிவித்துள்ளார்.

தற்போது 78 வதான ஈ.ஜீன் கரோல், 2019 நவம்பர் மாதத்தில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக சிவில் அவதூறு வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ட்ரம்புக்கு எதிராக மற்றொரு வழக்கை ஜீன் கரோல் தாக்கல் செய்துள்ளார். 

ஈ ஜீன் கரோல் 

தன்னை ட்ரம்ப் பலவந்தமாக பற்றிப்பிடித்ததாகவும் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் ஈ.ஜீன் கரோல் குற்றம் சுமத்தியுள்ளார்.

27 வருடங்களுக்கு முன்னர் நியூ யோர்கிலுள்ள ஆடம்பர வணிக நிலையமொன்றின் ஆடை மாற்றும் அறையில் வைத்து இத்தாக்குதல் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்

அத்துடன், டொனால்ட் ட்ரம்ப் அவரின் ட்ரூத் சோஷல் எனும் சமூக வலைத்தளத்தல் கடந்த மாதம் தன்னைப் பற்றி அவதூறாக பதிவொன்றை வெளியிட்டதாகவும் ஜீன் கரோல் குற்றம் சுமத்தியுள்ளார். மேற்படி பதிவில் பாலியல் வல்லறவு குற்றச்சாட்டை 76 வயதான டொனால்ட் ட்ரம்ப்  நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது,

தனக்கு ஏற்பட்ட உளவியல் துன்பங்கள், பாதிப்புகள், தனது கௌரவம், புகழுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக தனக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என ஈ ஜீன் கரோல் கோரியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13,000 யுக்ரைன் படையினர் பலி: யுக்ரைனிய...

2022-12-02 10:27:47
news-image

பிரேஸில் மண்சரிவில் இருவர் பலி, 30...

2022-12-02 09:23:11
news-image

“ராவணன், ராட்சசன், ஹிட்லர்... என்னை விமர்சிப்பதில்...

2022-12-01 17:06:54
news-image

இந்தியாவின் கதையை பகிர ஜி-20 தலைமை...

2022-12-01 16:39:10
news-image

தென் ஆபிரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு...

2022-12-01 15:54:26
news-image

கொவிட் கட்டுப்பாடுகளிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்த...

2022-12-01 15:11:13
news-image

ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபு ஹசன்...

2022-12-01 14:42:12
news-image

இந்தியா - கயானா சந்திப்பு :...

2022-12-01 14:11:24
news-image

நியூ ஸிலாந்து, பின்லாந்து பிரதமர்களின் சந்திப்புக்கு...

2022-12-01 13:21:36
news-image

இந்தியா - லாட்வியா பிரதிநிதிகள் சந்திப்பு:...

2022-12-01 16:15:14
news-image

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9...

2022-12-01 09:21:37
news-image

ஆப்கான் குண்டுவெடிப்பில் 16 பேர் பலி

2022-11-30 16:39:17