வடை, ஐஸ் கிறீம் வாங்குவதற்கு பக்கத்து வீட்டை உடைத்து திருடிய சிறுவர்கள் இருவர் கைது

By T. Saranya

25 Nov, 2022 | 09:31 AM
image

அளவத்துகொடை பொலிஸ் பிரிவில் உள்ள சைஸ்ட்டன் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள்  வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் நேற்று (24) கைதாகி உள்ளனர்.

இது பற்றித் தெரிய வருவதாவது,

மேற்படி சம்பவத்தில் இரு சிறுவர்களும் அயல் வீடு ஒன்றில் வீட்டார் இல்லாத நேரத்தில் பின் பக்கம் கதவை உடைத்து உட்புகுந்துள்ளனர். 

அங்கு வைக்கப்பட்டிருந்த மின் உபகரணங்கள் சிலவற்றை  திருடி உள்ளனர். 

பின்னர் அதில் ஒரு மின் உபகரணத்தை 300 ரூபா பணத்திற்கு விற்பனை செய்துள்ளனர். 

அந்த உபகரணத்தின் உண்மைப் பெறுமதி 3,650 ரூபாவாகும். விற்பனை செய்து கிடைத்த 300 ரூபா பணத்திற்கு வடையும், ஐஸ்கிறீமும் வாங்கி சாப்பிட்டுள்ளனர். மற்றும் உபகரணங்களை   பக்கத்தில் உள்ள ஒரு புதரில் எறிந்துள்ளனர்.

வீட்டார் செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து  திருடப்பட்ட பொருட்களை பொலிஸார்  மீட்டுள்ளனர். 

திருடப்பட்ட  மின் உபகரணம் ஒன்றை 300 ரூபாவிற்கு  வாங்கிய நபரும் சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சுப்பதவிகளை அதிகரிக்க அரசாங்கத்திற்கு இருக்கும் உரிமை...

2022-12-09 17:21:08
news-image

இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் ...

2022-12-09 21:06:09
news-image

3 பில்லியன் டொலராக வெளிநாட்டு கையிருப்பை ...

2022-12-09 17:24:21
news-image

டயனா கமகே தொடர்பில் முன்வைத்த விமர்சனங்கள்...

2022-12-09 21:05:22
news-image

ஓய்வூதிய வயது 61 என்ற தீர்மானத்தை...

2022-12-09 13:43:10
news-image

ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சொகுசு மெத்தை...

2022-12-09 17:12:08
news-image

பொருளாதாரச் சுமையை நாட்டு மக்கள் மீது...

2022-12-09 13:42:09
news-image

நீதிமன்ற பாதுகாப்பிலிருந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய...

2022-12-09 19:47:17
news-image

புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்...

2022-12-09 16:38:53
news-image

கூட்டமைப்பினரை எதிர்த்தமைக்கான காரணத்தை தெரிவித்தார் உதய...

2022-12-09 11:32:18
news-image

காற்று மாசடைவில் கணிசமான மாற்றம் :...

2022-12-09 13:45:15
news-image

நாளை புயலாக மாறுகிறது மாண்டஸ் :...

2022-12-09 16:47:25