5 உலகக் கிண்ண அத்தியாயங்களிலும் கோல் போட்டு சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 

25 Nov, 2022 | 09:59 AM
image

(நெவில் அன்தனி)

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக சாதனை படைக்க, கானாவுக்கு எதிராக ஸ்டேடியம் 974 விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற எச் குழுவுக்கான மிகவும் பரபரப்பான உலகக் கிண்ணப் போட்டியில் 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் போர்த்துக்கல் வெற்றிபெற்றது.

ஐந்தாவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் இம்முறை விளையாடும் போர்த்துக்கல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஐந்து உலகக் கிண்ண அத்தியாயங்களிலும் (2006, 2010, 2014, 2018, 2022) கோல் போட்டு சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

இப் போட்டியின் முதலாவது பகுதியில் கோல் போடப்படாத நிலையில் இடைவேளைக்குப் பின்னர் 16 நிமிட இடைவெளியில் 4 கோல்கள் உட்பட 5 கோல்கள் போடப்பட ஆட்டத்தில் பரபரப்பும் விறுவிறுப்பும் ஏற்பட்டதுடன் இரசிகர்களுக்கு இப் போட்டி பெரு விருந்தாக அமைந்தது.

போட்டியின் முதலாவது பகுதியில் போர்த்துக்கல் சார்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் போட எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதேவேளை, கானா பின்கள வீரர்கள் திறமையாக விளையாடி போர்த்துக்கல்லை கட்டுப்படுத்திய வண்ணம் இருந்தனர்.

போட்டியின் 33ஆவது நிமிடத்தில் ரொனால்டோ பந்தை கோலினுள் புகுத்தியபோதிலும் அவர், கானா விரர் ஒருவரை விதிகளுக்கு முரணான வகையில் வீழ்த்தியதால் அந்த கோல் கருத்தில் கொள்ளப்பட்வில்லை.

இடைவேளை நெருங்கியபோது கானா   கோல்   எல்லையை போர்த்துக்கல் ஆக்கிரமித்த வண்ணம் இருந்தபோதிலும் கோல் போட முடியாமல் போனது.

இரண்டு அணிகளும் கோல் எதுவும் போடப்படாத நிலையில் இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இடைவேளைக்குப் பின்னர் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

போட்டியின் 55ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் போட எடுத்த முயற்சி தடுக்கப்பட்டது.

போட்டியின் 62ஆவது நிமிடத்தில் கானா பெனல்டி எல்லைக்குள் பந்தை நகர்த்திச் சென்ற ரொனால்டோவை மொஹம்மத் சலிசு வீழ்த்தியதால் மத்தியஸ்தர் உடனடியாக பெனல்டி வழங்கினார்.

இதனை கானா வீரர்கள் ஆட்சேபிக்க, வீடியோ உதவி மத்தியஸ்தர் அதனை பெனல்டி என உறுதிப்படுத்தினார்.

இதனை அடுத்து 65ஆவது நிமிடத்தில் அந்தப் பெனல்டியை கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக்கி 5 உலகக் கிண்ண அத்தியாயங்களில் கோல் போட்ட முதலாவது வீரர் என்ற உலக சாதனையை நிலைநாட்டினார். சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் அது அவரது 118ஆவது கோலாக அமைந்தது.

அத்துடன் உலகக் கிண்ண போட்டியில் கோல் போட்ட இரண்டாவது வயதான (37 வருடங்கள், 292 நாட்கள்) வீரர் என்ற பெருமையையும் ரோனால்டோ பெற்றுக்கொண்டார். 1994 உலகக் கிண்ணப் போட்டியில் கோல் போட்ட கெமறூன் வீரர் ரொஜர் மில்லா என்பவரே அதிகூடிய வயதில் (42 வருடங்கள், 39 நாட்கள்) கோல் போட்ட வீரராவார்.

ரொனால்டோ போட்ட கோலினால் போர்த்துக்கல் அணி வீரர்களும் அரங்கில் குழுமியிருந்த போர்த்துக்கல் இரசிகர்களும் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

ஆனால் அந்த ஆனந்தம் 73 ஆவது நிமிடத்தில் கானா அணித் தலைவர் அண்ட்றே அயேவ் போட்ட கோலினால் மறைந்துபோனது.

மொஹமத் குத்துஸ் இடதுபுறத்திலிருந்து தாழ்வாக பரிமாறிய பந்து போர்த்துக்கல் வீரர் டெனியெலோ பெரேய்ரா பாதத்தை உராய்ந்தவாறு அண்ட்ரே அயேவை நோக்pச் சென்றது. அவர் 6 யார் கட்டத்துக்குள் இருந்து பந்தை கோலினுள் புகுத்தி கோல் நிலையை சமப்படுத்தினார்.

எனினும் 77ஆவது நிமிடத்தில் புரூனோ பெர்னாண்டஸ் பரிமாறிய பந்தை ஜோவா பீலிக்ஸ் கோலாக்கி போர்த்துக்கல்லை மீண்டும் முன்னிலையில் இட்டார்.

அடுத்த 2 நிமிடங்களில் ரபாயல் லியோ அலாதியான கோல் ஒன்றைப் போட்டு ஆட்டத்தின் பிடியை போர்த்துக்கல் பக்கம் திருப்பினார்.

எவ்வாறாயினும் போர்த்துக்கல்லுக்கு கடும் சவாலாக விளங்கிய கானா 88ஆவது நிமிடத்தில் மாற்றுவீரர் ஒஸ்மான் புக்காரி மூலம் கோல் போட்டு   போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

உபாதையீடு நேரம் உட்பட அடுத்த 10 நிமிடங்கள் இரண்டு அணிகளும் உக்கிரமமாக மோதிக்கொண்ட வண்ணம் இருந்தன. போர்த்துக்கல்லுக்கு 3 வாய்ப்புகளும் கானாவுக்கு ஒரு வாய்ப்பும் கோல் போடுவதற்கு கிடைத்தது. ஆனால் இரண்டு அணிகளினதும் பின்கள வீரர்கள் அவற்றை முறியடித்தனர்.

போட்டி முடிவடைய சில நிமிடங்கள் இருந்தபோது போர்த்துக்கல் கோல்காப்பாளர் டியகோ கொஸ்டா, கோல் கிக்குக்காக பந்தை உருட்டிவிட கானா வீரர் ஒருவர் கடுகதி வேகத்தில் பந்தை கோலினுள் புகுத்த முயற்சித்தார். கோலை நோக்கி உருண்டுசென்ற பந்தை போர்த்துக்கல் பின்கள வீரர் திசை திருப்பி போர்த்துக்கல்லின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்தப் போட்டி முடிவுடன் எச் குழுவுக்கான அணிகள் நிலையில் போர்த்துக்கல் 3 புள்ளிகளுடன் முதலிட்த்தை வகிக்கிறது.

இந்தப் போட்டி முடிவுடன் எச் குழுவுக்கான அணிகள் நிலையில் போர்த்துக்கல் 3 புள்ளிகளுடன் முதலிட்த்தை வகிக்கிறது.

உருகுவேக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான இந்தக் குழுவுக்கான போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவைடைந்ததால் இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியுடன் அணிகள் நலையில் இரண்டாம் இடத்தில் இருக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரசிகர்களை கோபமூட்டிய ரொனால்டோவுக்கு ஒரு போட்டித்தடை,...

2024-03-01 17:22:29
news-image

ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல்...

2024-03-01 16:18:07
news-image

டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி...

2024-03-01 15:05:04
news-image

ஒலிம்பிக் விழாவுக்கான பாதுகாப்பு திட்டங்களைக் கொண்ட...

2024-02-29 20:04:27
news-image

பங்களாதேஷுடனான தொடர்களில் திறமையை வெளிபடுத்த முடியும்...

2024-02-29 14:55:53
news-image

பங்களாதேஷுடனான முதல் இரண்டு ரி20 போட்டிகளில்...

2024-02-28 23:55:46
news-image

பொதுநலவாய செஸ் போட்டியில் இலங்கைக்கு ஒரு...

2024-02-28 21:19:17
news-image

ஒரு நூற்றாண்டுக்கு முன் பாரிஸ் நகரில்...

2024-02-28 17:19:56
news-image

றோயல் செலஞ்சர்ஸுக்கு இலகுவான வெற்றி

2024-02-28 13:57:45
news-image

கெப், ராதா பந்துவீச்சிலும் லெனிங், ஷஃபாலி...

2024-02-27 17:50:51
news-image

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றிகளைப்பெற்று அசத்தும்...

2024-02-27 16:51:10
news-image

நமிபியா வீரர் ஈட்டன் அதிவேக ரி20...

2024-02-27 16:54:52