ரொனால்டோ சாதனை: கானாவுக்கு எதிராக வெற்றி கண்டது போர்த்துகல்

By Sethu

25 Nov, 2022 | 12:07 AM
image

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற 3 ஆவது ஆட்டத்தில் கானாவை - போர்த்துகல் அணி 3:2 கோல்கள் விகிதத்தில் வென்றது.

குழு எச் இலுள்ள இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள 974 அரங்கில் நடைபெற்றது.

இடைவேளை வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

65 ஆவது நிமிடத்தில் போர்த்துகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் புகுத்தினார். 

இதன்மூலம். 5 உலகக் கிண்ண சுற்றுப்போட்டிகளில் கோல் புகுத்திய உலகின் முதல் வீரர் எனும் சாதனைக்குரியவாரானார் ரொனால்டோ.

ஆனால், 73 ஆவது நிமிடத்தில் போர்த்துகலின் பின்வரிசையில் ஏற்பட்ட தடுமாற்றங்களுக்கு மத்தியில் கானா வீரர் அண்ட்றே அயேவ் கோல் புகுத்தினார். இதனால் கோல் எண்ணிக்கை சமநிலையை அடைந்தது.

73 ஆவது நிமிடத்தில் போர்த்துகலின் ஃபீலிக்ஸ் செகுய்ரா கோல் புகுத்தி  போர்த்துகலை மீண்டும் முன்னிலைக்கு கொண்ட வந்தார். 80 ஆவது நிமிடத்தில் போர்;த்துகலின் கொன்சிகாவோ லியோ அவ்வணியின் 3 ஆவது கோலை அடித்தார். 

எனினும்,  89 ஆவது நிமிடத்தில் கானா வீரர் புகாரி, கானாவின் 2 ஆவது கோலை புகுத்தினார்.

இதனால் இப்போட்டியில் 3:2 கோல்கள் விகிதத்தில் போர்த்துகல் வென்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரேஸில் - குரோஷியா போட்டியுடன் உலகக்...

2022-12-09 10:18:00
news-image

கலம்போ ஸ்டார்ஸுக்கு முதலாவது வெற்றி :...

2022-12-09 07:40:15
news-image

ஸ்பெய்ன் கால்பந்து அணியின் பயிற்றுநர் நீக்கப்பட்டார்:...

2022-12-08 18:28:45
news-image

தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம்...

2022-12-08 17:43:11
news-image

ரசிகர்களின் கோஷங்களால் குரோஷியாவுக்கு பீபா 1.94...

2022-12-08 16:12:46
news-image

வரலாறு படைத்தது வத்தளை லைசியம்; நந்துன்,...

2022-12-08 16:14:19
news-image

நான்கு பற்களை இழந்தார் சாமிக நேற்றைய...

2022-12-08 10:46:41
news-image

க்ளடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ப்றத்வெய்ட்,...

2022-12-08 10:09:41
news-image

மெஹிதி ஹசன் மிராசின் சகலதுறை ஆட்டத்தால்...

2022-12-07 21:48:33
news-image

தீக்ஷன, வியாஸ்காந்த், சதீர, அவிஷ்க அபாரம்...

2022-12-07 21:42:13
news-image

நியூ ஸிலாந்து றக்பி தலைவராக முதல்...

2022-12-07 13:11:52
news-image

ரமொஸின் ஹெட்-ரிக் கோல்களின் உதவியுடன் கால்...

2022-12-07 10:24:18