புத்தெழுச்சி பெற்றுள்ள பிரேஸில் இன்று சேர்பியாவை எதிர்த்தாடுகிறது

25 Nov, 2022 | 10:02 AM
image

ரஷ்யாவில் நான்கு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற உலகக் கிண்ண கால் இறுதிப் போட்டியில் பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்த அணியில் இடம்பெற்ற வீரர்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் நீக்கப்பட்டு புதிய வீரர்களுடன் புத்தெழுச்சி  பெற்ற  அணியாக கத்தார் 2022 உலகக் கிண்ண கால்ந்தாட்டப் போட்டியை பிரேஸில் எதிர்கொள்ளவுள்ளது.

ஐந்து தடவைகள் உலக சம்பியனானதும் மூன்று கண்டங்களில் (ஐரோப்பா 1958,  அமெரிக்கா 1962 சிலி, 1970, மெக்சிகோ, 1994 ஐக்கிய அமெரிக்கா, ஆசியா 2002,) சம்பியனான ஒரு நாடுமான பிரேஸில் இன்று வியாழக்கிழமை (24) ஜீ குழுவுக்னான தனது ஆரம்பப் போட்டியில் சேர்பியாவை எதிர்த்தாடவுள்ளது.

லுசெய்ல் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப் போட்டியில் வெற்றிபெறுவதற்கு அனுகூலமான அணியாக பிரேஸில் தென்படுகிறது.

சர்வதேச கால்பந்தாட்ட அணிகளுக்கான தரவரிசையில் முதலாம் இடத்தில் இருக்கும் பிரேஸில் இம்முறை நேமாரின் சுமையைக் குறைக்கும் வகையில் இளம் வீரர்கள் சிலரை அணியில் இணைத்துக்கொண்டுள்ளது. நேமாருக்கு பக்கத்துணையாக வினிசியஸ் ஜூனியர், அன்தனி, ரஃபின்ஹா ஆகிய பதின்மவயது வீரர்கள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பந்து பரிமாற்றம், வேகமான ஆட்டத்திறன், பந்தை சிறப்பாக கட்டுப்படுத்துதல், சிறந்த புரிந்துணர்வு ஆகிய அனைத்தையும் கொண்ட பிரேஸில் இன்றைய போட்டியில் பெரு வெற்றியை ஈட்டி குழுவில் முதிலிடத்தைப் பெற முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் பிரேஸிலின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர் 30 வயதான நேமார் ஆவார். 2011இல் பிரேஸில்  அணியில்  அறிமுகமானது முதல் யாரும் எதிர்பாராத அற்புத ஆற்றல்களுடன் விளையாடிவரும் நெமாருக்கு பெரும்பாலும் இது கடைசி உலகக் கிண்ண சுற்றுப் போட்டியாக அமையக்கூடும் என்பதால் தனது அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்றுகொடுக்க கடுமையாக முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேமாருடன் வினிசியஸ் ஜூனியர், பின்கள வீரரும் அனுபவசாலியுமான தியாகோ சில்வா, பின்கள வீரர் மார்கினோஸ், பின்கள வீரர் கெசிமிரோ, மத்திய கள எதிர்த்தாடும் வீரர் லூக்கஸ் பக்கிட்டா ஆகியோர் பிரேஸில் அணியில் இடம்பெறும் பிரதான வீரர்கள் ஆவர்.

சேர்பியா

2022 உலகக் கிண்ண காலபந்தாட்டப் போட்டியில் மிகவும் சிரமமான குழுவில் இடம்பெறும் சேர்பியா இன்று நள்ளிரவுக்குப் பின்னர் பிரேஸிலை தனது ஆரம்பப் போட்டியில் சந்திக்கவுள்ளது.

யூகோஸ்லாவியாவிலிருந்து பிளவுபட்ட பின்னர் 2006இல்  சேர்பியா  மற்றும் மோன்டேநீக்ரோ என்ற பெயரில் விளையாடிய சேர்பியா, 2010 மற்றும் 2018 ஆகிய உலகக் கிண்ண அத்தியாயஙகளில் சுதந்திர நாடாக விளையாடியது. ஆனால், அந்த மூன்று அத்தியாயங்களிலும் முதலாம் சுற்றுக்கு அப்பால் சேர்பியா முன்னேறவில்லை.

ஐரோப்பிய வலய உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் கடைசிப் போட்டியில் போர்த்துக்கல்லை 90ஆவது நிமிடத்தில் வெற்றிகொண்டு உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்ற சேர்பியா, இம் முறை இரண்டாம் சுற்றுக்கு முன்னேறுவதற்கு தகுதியான அணி என கருதப்படுகிறது.

கத்தார் 2022 உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தின் ஆரம்பத் தினத்தன்று தனது 34ஆவது வயதை எட்டிய அணித் தலைவர் டுசான் டடிக் மிக முக்கிய வீரராக சேர்பியா அணியில் இடம்பெறுகிறார்.

அவருடன் டுசான் விலாஹோவிச், மத்திய கள வீரர்களான சேர்ஜெஜ் மிலினோவிச் சாவிக் மற்றும் டுசான் டாடிச், முன்கள வீரர்களான டுசான் விலாஹோவிச் மற்றும் அலெக்ஸாண்டர் மிட்ரோவிச், பக்கநிலை மத்திய கள வீரர் பிலிப் கோஸ்டிச் ஆகியோர் சேர்பியா அணியில் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49