பாராளுமன்றத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக பொல்டுவ சந்தியிலிருந்து பாராளுமன்றத்திற்கான வீதி மூடப்பட்டுள்ளதாக   போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாராளுமன்றத்துக்கு அருகில் உள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி கூட்டு எதிர்கட்சியின் ஆதரவாளர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு  பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.