உலகக் கிண்ணப் போட்டியில் போர்த்துகலை சந்திக்கிறது கானா !

24 Nov, 2022 | 08:16 PM
image

(நெவில் அன்தனி)

கத்தாரில் ஸ்டேடியம் 974 விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ள எச் குழுவுக்கான இரண்டாவது  உலகக் கிண்ணப்   போட்டியில் போர்த்துக்கலும் கானாவும் இன்று இரவு விளையாடவுள்ளன.

உலகின் அதிசிறந்த வீரர்களில் ஒருவரும் அதிக சர்வதேச கோல்களைப் (117) போட்டுள்ள சாதனையாளருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ 5ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடுவதுடன் இது அவரது கடைசி உலகக் கிண்ணப் போட்டியாக அமையவுள்ளது.

போர்த்துக்கல் அணியில் சகல நிலைகளிலும் அதி சிறந்த வீரர்கள் இடம்பெறுகின்றனர். கடந்த 6 வருடங்களில் யூரோ கிண்ணத்தையும் (2016), நேஷன்ஸ் லீக் கிண்ணத்தையும் (2019) வென்றெடுத்துள்ள போர்த்துக்கல் முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை வென்றெடுக்க முயற்சிக்கவுள்ளது.

உலகக் கிண்ண வரலாற்றில் 1966இலேயே அதிசிறந்த பெறுபேறை போர்த்தக்கல் பதிவு செய்தது. அந்த வருடம் போர்த்தக்கல் மூன்றாம் இடத்தைப் பெற்றது.

அதன் பின்னர் 20 வருடங்கள் கழித்து மெக்சிகோவிலும் பின்னர் 16 வருடங்கள் கழித்து தென் கொரியா மற்றும் ஜப்பானிலும்    உலகக் கி;ண்ணப் போட்டிகளில் பங்குபற்றிய போர்த்துக்கல் அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் முதல் சுற்றுடன் வெளியேறியது.

ஜேர்மனியில் 2006இல்     நடைபெற்ற உலகக் கிண்ண அத்தியாயத்தில் போர்த்துக்கல் நான்காம் இடத்தைப் பெற்றது.

போர்த்துக்கல் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிசிறந்த விரராக இடம்பெறுவதுடன் பின்கள வீரரகளான ஜோவா கென்சிலோ மற்றும் ரூபென் டயஸ், மத்திய கள வீரர்களான புரூனோ பெர்னாண்டஸ், பேர்னார்டோ சில்வா ஆகியோர் முக்கிய விரர்களாக இடம்பெறுகின்றனர்.

கானா

உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் 2006இல் அறிமுகமான கானா, அந்த வருடம் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி பிரேஸிலிடம் தோல்வி அடைந்தது.

அதனைத் தொடர்ந்து 2014வரை தொடர்ச்சியாக உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிவந்த கானா, 2010இல் கால் இறுதிவரை முன்னேறி உருகுவேயிடம் பெனல்டி முறையில் தோல்வி அடைந்தது. மேலதிக நேரம் வரை நீடித்த அப் போட்டியில் 120ஆவது நிமிடத்தில்  கிடைத்த பெனல்டியை அசமோவா கியான் தவறவிட்டது கானாவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

ரஷ்யாவில் 2018இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதிபெறத் தவறிய கானா 8 வருடங்களின் பின்னர் மிண்டும் உலகக் கிண்ணப் போட்டியில் பலத்த எதிர்பார்ப்புடன் விளையாடவுள்ளது.

மிகவும் கடினமான எச் குழுவில் இடம்பெறும் கானா இன்று நடைபெறவுள்ள போர்த்துக்கல்லுடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டால் மற்றைய போட்டிகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

107 சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ள முன்கள வீரர் அண்ட்ரே ஆயேவ் அணித் தலைவராக இவ் வருடம் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் சுற்றில் 3 போட்டிகளிலும் ஆயேவ்  விளையாடினால் கானாவுக்காக அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை நிலைநாட்டுவார். அசமோவா 109 போட்டிகளில் விளையாடி இப்போதைக்கு முதலிடத்தில் இருக்கிறார்.

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக், யூரோப்பா லீக் ஆகிய போட்டிகளில் விளையாடிய அனுபவசாலியான மத்திய கள வீரர்களான மொஹமத் குத்துஸ்; மற்றும் ஈசாக்கு ஃபட்டாவு, பின்கள வீரர் டெனியல் அமார்ட்டி, முன்கள வீரர் இனாக்கி வில்லியம்ஸ் ஆகியோர் கானா அணியில் இடம்பெறும் மற்றைய முக்கிய வீரர்களாவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மெக்ஸிகோவை வென்ற ஆர்ஜன்டீனாவின் 2ஆம் சுற்றுக்கான...

2022-11-27 09:16:15
news-image

எம்பாப்பேயின் 2 கோல்களின் உதவியுடன் டென்மார்க்கை...

2022-11-27 07:15:26
news-image

ஆர்ஜன்டீனாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் போட்டியுடன் மேலும்...

2022-11-26 13:41:40
news-image

வரவேற்பு நாடான கத்தார் உலகக் கிண்ண...

2022-11-26 13:07:52
news-image

ஆப்கானிஸ்தானிடம் சொந்த மண்ணில் மண்டியிட்டது இலங்கை 

2022-11-26 07:26:18
news-image

நெதர்லாந்து - ஈக்வடோர் போட்டி சமநிலையில்...

2022-11-25 23:48:53
news-image

கத்தாரை 3:1 விகிதத்தில் வென்றது செனகல்

2022-11-25 20:40:55
news-image

2022 உலகக் கிண்ணத்தில் முதல் சிவப்பு...

2022-11-25 18:14:13
news-image

லெதம், வில்லியம்சன் இணைப்பாட்ட உதவியுடன் இந்தியாவை...

2022-11-25 15:39:31
news-image

உலகக் கிண்ண இரண்டாம் சுற்றை குறிவைத்துள்ள...

2022-11-25 15:11:40
news-image

ஈரானின் பிரபல கால்பந்தாட்ட வீரர்  கைதானார்

2022-11-25 13:38:37
news-image

ரிச்சர்லிசனின் அபார கோல்களுடன் சேர்பியாவை வீழ்த்தியது...

2022-11-25 10:06:21