கொழும்பு – நீர்கொழும்புக்கிடையிலான ரயில் பாதையை மறித்து கல்கந்த பிரதேசத்தில்  ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தனியார் போக்­கு­வ­ரத்து துறை­யினர் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நாடு­மு­ழு­வதும் சேவை பகிஷ்­க­ரிப்பு நட­வ­டிக்­கையில்  ஈடு­பட்­டி­ருந்த நிலையில் நீர்­கொ­ழும்பு - கல்­கந்தை பகு­தியில் சிலர் ரயிலை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

ரயில் பாதையை விட்டு அகன்றுச் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும் குறித்த நபர்கள் தொடர்ந்து ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நேற்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது  பொலிஸார் கண்­ணீர்ப்­புகைப் பிர­யோகம் மேற்­கொண்­டுள்­ளதோடு 18 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்த நபர்களை நீர்கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.