இலங்கையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு - பாக்கிஸ்தான் தெரிவிப்பது என்ன

By Rajeeban

24 Nov, 2022 | 05:25 PM
image

பாக்கிஸ்தானுடனான டெஸ்ட் தொடரின் போது ஆட்டநிர்ணயசதி இடம்பெற்றது என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் உதவியை நாடியுள்ளமை தொடர்பில் கருத்துக்கூறுவதற்கு பாக்கிஸ்தானின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை  மறுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு;ச்சபை விசாரணை செய்யும் விடயம் குறித்து பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையினால் எதனையும் தெரிவிக்க முடியாது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகளிற்கும் இடையிலான சமநிலையில் முடிவடைந்த டெஸ்;ட் தொடரில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையோ அல்லதுஐசிசியோ எங்களை அணுகவில்லை என பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவர்கள் எங்களை அணுகாதவரை நாங்கள் எதனையும் தெரிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐசிசியின் ஊழல்தடுப்பு பிரிவு தற்போதெல்லாம் சர்வதேச போட்டிகளை உன்னிப்பாக கண்காணிக்கின்றது என பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜூலை தொடரின்போதும் அவர்கள் இலங்கையிலிருந்தனர் எதுவும் இடம்பெறவில்லை எந்த சந்தேகமும் எழவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மெக்ஸிகோவை வென்ற ஆர்ஜன்டீனாவின் 2ஆம் சுற்றுக்கான...

2022-11-27 09:16:15
news-image

எம்பாப்பேயின் 2 கோல்களின் உதவியுடன் டென்மார்க்கை...

2022-11-27 07:15:26
news-image

ஆர்ஜன்டீனாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் போட்டியுடன் மேலும்...

2022-11-26 13:41:40
news-image

வரவேற்பு நாடான கத்தார் உலகக் கிண்ண...

2022-11-26 13:07:52
news-image

ஆப்கானிஸ்தானிடம் சொந்த மண்ணில் மண்டியிட்டது இலங்கை 

2022-11-26 07:26:18
news-image

நெதர்லாந்து - ஈக்வடோர் போட்டி சமநிலையில்...

2022-11-25 23:48:53
news-image

கத்தாரை 3:1 விகிதத்தில் வென்றது செனகல்

2022-11-25 20:40:55
news-image

2022 உலகக் கிண்ணத்தில் முதல் சிவப்பு...

2022-11-25 18:14:13
news-image

லெதம், வில்லியம்சன் இணைப்பாட்ட உதவியுடன் இந்தியாவை...

2022-11-25 15:39:31
news-image

உலகக் கிண்ண இரண்டாம் சுற்றை குறிவைத்துள்ள...

2022-11-25 15:11:40
news-image

ஈரானின் பிரபல கால்பந்தாட்ட வீரர்  கைதானார்

2022-11-25 13:38:37
news-image

ரிச்சர்லிசனின் அபார கோல்களுடன் சேர்பியாவை வீழ்த்தியது...

2022-11-25 10:06:21