உலகக் கிண்ண கால்பந்தாட்டப்போட்டிகளின் போது அணித் தலைவர்கள் வன்லவ் கைப்பட்டி அணிவதற்கு பீபா தடை விதித்த நிலையில், ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் நான்சி பயீசர் அக்கைப்பட்டியை அணிந்துகொண்டு பீபா தலைவருக்கு அருகில் அமர்ந்திருந்தார்.
ஒருபாலின உறவுகொள்பவர்கள், பாலின மாற்றம் செய்தவர்கள் உட்பட்ட எல்ஜிபிடிகியூ (LGBTQ) சமூகத்தின் உரிமைகளுக்கு ஆதரவாக 'வன்லவ்' எனும் கைப்பட்டியை போட்டிகளின் போது அணித்தலைவர்கள் அணிவதற்கு 7 ஐரோப்பிய அணிகள் தீர்மானித்திருந்தன. இங்கிலாந்து, வேல்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், சுவிட்ஸர்லாந்து. பெல்ஜியம் ஆகியனவே இந்நாடுகளாகும்.
ஆனால், போட்டியின்போது வீர்ரகள் வன்லவ் கைப்பட்டியை அணிந்தால் மஞ்சள் அட்டை காட்டப்படும் என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தினால் (பீபா) எச்சரிக்கப்பட்டது.
இதனால், வன்லவ் கறுப்புப்பட்டி திட்டத்தை முன்வைத்த, 7 நாடுகளின் கால்பந்தாட்டச் சங்கங்கள் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தன.
இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற ஜேர்மனி- ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, ஜேர்மன் உள்துறை அமைச்சர் நான்சி பயீசர் இப்பட்டியை அணிந்துகொண்டு பீபா தலைவர் ஜியானி இன்ஃபன்டினோவுக்கு அருகில் அமர்ந்திருந்தார்.
பீபாவின் தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜப்பானுடனான போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் ஜேர்மனிய வீரர்கள் அணியாக போஸ்கொடுத்தபோது வாயை கையால் மூடிக்கொண்டு போஸ் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி:
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM