இரத்தினப்புரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கதான் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தின் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.