தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கை ஒத்திவைத்தது  நீதிமன்றம்

By Digital Desk 2

24 Nov, 2022 | 05:16 PM
image

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கோரும் வழக்கை எதிர்வரும் 29ஆம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடத்தப்படுகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2014ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை.

ஆனால் பாரம்பரிய விளையாட்டை நடத்தியே தீர வேண்டும் என்று தமிழகத்தில் தன்னெழுச்சியாக போராட்டம் நடந்தது. சென்னை மெரினாவில் திரண்டு இளைஞர்கள் நடத்திய அமைதி போராட்டத்தை உலகமே வியந்து பார்த்தது. இதன் தொடர்ச்சியாக தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கடந்த 2017ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

இந்த சட்டத்துக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்ததால் தற்போது தடையின்றி ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. ஆனால் இந்த அவசர சட்டத்தை எதிர்த்தும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரியும் பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளன.

இதனிடையே, தமிழக அரசு சார்பில் சட்டத்தரணி டி.குமணன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வ வாதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜல்லிக்கட்டு பாரம்பரிய தமிழக விளையாட்டு. கிராமங்கள் முதல் உட்கிராமங்கள் வரை நடத்தப்படுகிறது. விலங்குகளுக்கு அடிப்படை உரிமை இல்லை.

விலங்குகளுக்கு அடிப்படை உரிமை என்ற உச்ச நீதிமன்றமத்தின் தீர்ப்பு தவறானது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தேவையான பாதுகாப்பான ஏற்பாடு செய்யப்படுகின்றன. விலங்கு வதை என்ற பெயரில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முழுமையான தடை விதிக்கக்கூடாது.

அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே அவசர சட்டம் இயற்றப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை இரத்து செய்யக்கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நேரம் இல்லாததால் இந்த மனுக்கள் அனைத்தும் வியாழக்கிழமை (நவ.24)காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதன்படி உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பில் இருந்தும் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டத்தை இயற்றிய சட்டப்பேரவையின் அதிகாரம் குறித்து மட்டுமே அக்கறை செலுத்த உள்ளோம் என்று தெரிவித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து...

2022-11-26 18:40:02
news-image

தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள...

2022-11-26 15:04:52
news-image

ஐஎஸ் அமைப்பை சேர்ந்த நீல் பிரகாசை...

2022-11-26 13:18:19
news-image

6 பேர் விடுதலையை எதிர்த்து மறுசீராய்வு...

2022-11-26 13:18:26
news-image

ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில்...

2022-11-26 11:48:29
news-image

மின்வெட்டால் உக்ரேனில் 60 இலட்சத்திற்கும் அதிகமான...

2022-11-26 10:08:29
news-image

மும்பைபயங்கரவாத தாக்குதலுக்கு 14 வருடங்கள்

2022-11-26 09:50:46
news-image

பிரேசிலில் இரண்டு பாடசாலைகள் மீது துப்பாக்கி...

2022-11-26 10:22:51
news-image

என் கணவர் பாலியல் வெறி பிடித்தவர்...

2022-11-25 16:38:29
news-image

ஏவுகணை தாக்குதல் மின்சாரம் துண்டிப்பு ;...

2022-11-25 20:58:06
news-image

பிஹார் அவலம் | 5 வயது...

2022-11-25 15:04:58
news-image

பாடகர் கிறிஸ் வூவுக்கு பாலியல் வல்லுறவு...

2022-11-25 15:40:41