புதுக்குடியிருப்பு கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம் திறப்பு

By Nanthini

24 Nov, 2022 | 04:40 PM
image

டந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் அபிவிருத்தி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் வாழ்ந்து வருகின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் தேவைகளையறிந்து பல்வேறுபட்ட உதவிகளை 'இலங்கை காப்போம்' நிறுவனம் வழங்கி வருகிறது.

அதற்கமைய, திருகோணமலை, வரோதய நகர் புதுக்குடியிருப்பு கிராமத்தில் உள்ள 235 குடும்பங்களில் 25 குடும்பங்கள், சுமார் 10 வருடங்களாக உறுதியான பாலமின்றி பல கஷ்டங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர். 

இவ்விடயம் இலங்கை காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரனின் (திலீப்) கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அதனையடுத்து உப்புவெளி பிரதேச சபையும் இலங்கை காப்போம் நிறுவனமும் இணைந்து பல இலட்சம் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட பாலம் நேற்று புதன்கிழமை (நவ 23) திறந்துவைக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கும் கையளிக்கப்பட்டது.

இலங்கை காப்போம் நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.ஆர்.பிரவினா தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவுக்கு உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஆர்.ஏ.எஸ்.ரீ.ரத்நாயக்க மற்றும் காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

இதன்போது இவர்கள் பாலத்தை திறந்துவைத்ததோடு, அப்பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு பயன் தரும் மரக்கன்றுகளையும் வழங்கிவைத்தனர்.

கடந்த 10 வருடங்களாக அப்பிரதேசத்தில் பாலமொன்று இல்லாமல் அங்குள்ள 25 குடும்பங்கள், குறிப்பாக, பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகள் பல கஷ்டங்களை அன்றாடம் எதிர்நோக்கியுள்ளனர். 

அத்துடன் மழைக்காலங்களிலும் பெரும் சிரமங்களை சந்தித்துள்ளதாக அப்பிரதேசவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

"அன்றாடம் கூலித்தொழில் செய்து, எங்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றி வருகிறோம். இருப்பதற்கு ஒழுங்கான வீடு இல்லாத நிலைமையில் தான் வாழ்ந்து வருகின்றோம். 

எங்களின் நிலைமையை இலங்கை காப்போம் நிறுவனத்திடம் எடுத்துச் சொன்னபோது, அதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொண்டு, இப்பாலத்தை நிர்மானித்து, இன்று எங்களின் பாவனைக்கு கையளித்துள்ளனர். 

இப்பாலத்தை நிர்மானித்து தர உதவிய அனைவருக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்" என அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்நிகழ்வில் உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர்களான எஸ். விபுசன், வி.பாபுகாந், கிராமசேவகர் எம். பிரசாந்தினி, உப்புவெளி பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் இலங்கை காப்போம் நிறுவனத்தின் செயலாளர், பொருளாளர், நிருவாக சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா...

2022-11-26 09:51:57
news-image

டி.ஏ.ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினம்

2022-11-25 18:56:28
news-image

‘மறைந்தும் மறையாத’ மாதாந்த இசை நிகழ்ச்சி

2022-11-25 19:00:05
news-image

கல்முனை அல் பஹ்ரியாவில் அபிவிருத்திக் குழு,...

2022-11-25 15:15:24
news-image

'ஊன்றுகோல்' நூல் அறிமுகவிழா

2022-11-25 13:58:40
news-image

அலியாவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு விளையாட்டுப் பொருட்கள்...

2022-11-25 14:09:04
news-image

வெருகல் பிரதேச இலக்கிய விழா

2022-11-25 11:36:30
news-image

நுண்கலைத் துறையில் இளங்கலைஞர் விருது பெற்றார்...

2022-11-25 11:01:52
news-image

மறைந்த முத்து சிவலிங்கத்தின் இறுதி ஊர்வலம்

2022-11-25 09:46:57
news-image

புதுக்குடியிருப்பு கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம்...

2022-11-24 16:40:55
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன்...

2022-11-24 15:18:34
news-image

கொழும்பு -15 புனித அந்திரேயார் ஆலய...

2022-11-24 14:46:50