ஸ்கொட்லாந்து கடற்கரையில் விநோத உயிரினம் ; வேற்றுக்கிரக உயிரினமா ?

By T. Saranya

24 Nov, 2022 | 04:40 PM
image

ஸ்கொட்லாந்தில் எடின்பரோவில் உள்ள போர்டோபெல்லோ கடற்கரையில் மைக் அர்னாட் என்பவர் ஒரு வினோத உயிரினத்தை கண்டுள்ளார். 

இந்த உயிரினம் புவியில் உள்ள உயிரினத்தை காட்டிலும் வித்தியாசமாக உள்ளதாக உணர்ந்த அவர், இது ஒருவேளை வேற்றுக்கிரக உயிரினமாக இருக்கக்கூடும் என அஞ்சினார். 


(படம் : SWNS)

அந்த உயிரினத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவர் கூறும்போது, 

நான் இதனை வித்தியாசமான முட்களுடன் பார்த்தேன். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

பிரகாசமான பச்சை மற்றும் தங்க நிறங்கள் என்னை நேராக ஈர்த்தது. நான் அதைப் புரட்டினேன், அதில் நிறைய சிறிய கால்கள் இருப்பதைக் கண்டேன்.

நான் அதைப் போன்ற எதையும் பார்த்ததில்லை. அது ஒரு வேற்றுகிரக உயிரினமாக இருக்கக்கூடும் என்று என் மனதுக்கு தோன்றியது. என்று அவர் கூறினார். 


(படம் : SWNS)

இருப்பினும், ஸ்கொட்டிஷ் வனவிலங்கு அறக்கட்டளையைச் சேர்ந்த பீட் ஹாஸ்கெல் அவரது கூற்றை நிராகரித்து, அந்த உயிரினத்தை ஒரு கடல் எலி அல்லது ஒரு வகை புழு என அடையாளம் காட்டினார்.


(படம் : SWNS)

தண்ணீருக்கு வெளியே இருப்பது சற்று விசித்திரமாகத் தெரிகிறது, ஆனால் இது ஒரு வகையான கடல் முட்புழு. இது இங்கிலாந்து கடற்கரை முழுவதும் காணப்படுகிறது" என்று ஹாஸ்கெல் கூறினார்.

பளபளக்கும் பச்சை மற்றும் தங்க முட்கள் காரணமாக இது அசாதாரணமாகவும் மற்ற கடல் உயிரினங்களிலிருந்து வேறுபட்டதாகவும் கானப்படுகிறது.

தனக்கு ஆபத்து வரும்போது எச்சரிக்க, அதன் முட்கள் பச்சை, நீலம் அல்லது சிவப்பு நிறத்தில் ஒளிரும். அவை 30 செமீ நீளம் வரை வளரக்கூடியவை மற்றும் சிறிய நண்டுகள், ஹெர்மிட் நண்டுகள் மற்றும் பிற புழுக்களை இது உண்கிறது  என்பது குறிப்பிடத்த்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து...

2022-11-26 18:40:02
news-image

தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள...

2022-11-26 15:04:52
news-image

ஐஎஸ் அமைப்பை சேர்ந்த நீல் பிரகாசை...

2022-11-26 13:18:19
news-image

6 பேர் விடுதலையை எதிர்த்து மறுசீராய்வு...

2022-11-26 13:18:26
news-image

ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில்...

2022-11-26 11:48:29
news-image

மின்வெட்டால் உக்ரேனில் 60 இலட்சத்திற்கும் அதிகமான...

2022-11-26 10:08:29
news-image

மும்பைபயங்கரவாத தாக்குதலுக்கு 14 வருடங்கள்

2022-11-26 09:50:46
news-image

பிரேசிலில் இரண்டு பாடசாலைகள் மீது துப்பாக்கி...

2022-11-26 10:22:51
news-image

என் கணவர் பாலியல் வெறி பிடித்தவர்...

2022-11-25 16:38:29
news-image

ஏவுகணை தாக்குதல் மின்சாரம் துண்டிப்பு ;...

2022-11-25 20:58:06
news-image

பிஹார் அவலம் | 5 வயது...

2022-11-25 15:04:58
news-image

பாடகர் கிறிஸ் வூவுக்கு பாலியல் வல்லுறவு...

2022-11-25 15:40:41