சுவிட்சர்லாந்து - கெமறூன் இன்று மோதுகின்றன

Published By: Digital Desk 2

24 Nov, 2022 | 03:22 PM
image

(நெவில் அன்தனி)

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் முதல் சுற்று லீக் போட்டிகளின் முதலாம் கட்டம்   இன்று வியாழக்கிழமை (23) நடைபெறவுள்ள ஜீ மற்றும் எச் குழுக்களுக்கான போட்டிகளுடன் நிறைவடையவுள்ளன.

நாளை வெள்ளிக்கிழமையிலிருந்து அடுத்த நான்கு தினங்களுக்கு முதலாம் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டிகள் நடைபெறும்.

பிரேஸில், கெமறூன், சேர்பியா, சுவிட்சர்லாந்து ஆகிய நான்கு அணிகள் இடம்பெறும் ஜீ குழு போட்டிகளும் கானா, போர்த்துக்கல், தென் கொரியா, உருகுவே ஆகிய அணிகள் இடம்பெறும் எச் குழு போட்டிகளும் இன்று நடைபெறவுள்ளன.

சுவிட்சர்லாந்து - கானா

சுவிட்சர்லாந்துக்கும் கானாவுக்கும் இடையிலான போட்டி அல் ஜனூப் விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

16 ஆவது தடவையாக உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் விளையாடும் சுவிட்சர்லாந்து இரண்டாம் சுற்றுக்கு செல்வதை குறியாகக் கொண்டு இன்றைய போட்டியில் கெமறூனை வீழ்த்த முயற்சிக்கவுள்ளது.

அண்மைக்காலமாக உலக கால்பந்தாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திவந்துள்ள சுவிட்சர்லாந்து 5ஆவது தொடர்ச்சியான தடவையயாக இறுதிச் சுற்றில் விளையாட தகதிபெற்றுள்ளது.

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் கடைசியாக விளையாடிய 38 போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே சுவிட்சர்லாந்து தோல்வி அடைந்துள்ளது.

போர்த்துக்கல்லுக்கு எதிராக 2017இலேயே சுவிட்சர்லாந்து தோல்வி அடைந்திருந்தது. அதன் பெறுபேறுகளின் பிரகாரம் இம்முறை உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இரண்டாம் சுற்றுக்கு இலகுவாக முன்னேறும் என கருதப்படுகிறது.

அணித் தலைவரும் மத்திய கள வீரருமான 30 வயதுடைய க்ரானிட் ஸாக்கா, அணியின் தூணகாக விளங்குகிறார். 106 சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 12 கோல்களைப் போட்டுள்ளார்.

அவருடன் கோல் காப்பாளர் யான் சொமர், முன்கள வீரர் நோவா ஒக்காஃபோ, பின்கள வீரர் ரிக்கார்டோ ரொட்றிகஸ், மத்திய கள வீரர்களான ஸேர்டான் ஷக்கிரி மற்றும் ரெமோ ஃப்ரூலர் ஆகியோர் அணியில் இடம்பெறும் பிரதான விரர்களாவர்.

கெமறூன்

உலகக் கால்பந்தாட்டத்தில் வெகுவாக முன்னேறிவரும் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கெமறூன், கடினமான ஜீ குழுவில் தலைகீழ் முடிவுகளை ஏற்படுத்த முயற்சிக்கவுள்ளது.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் கால் இறுதிவரை முன்னேறிய 3 ஆபிரிக்க நாடுகளில் கெமறூனும் ஒன்றாகும். மற்றைய இரண்டு அணிகள் செனகலும் கானாவும் ஆகும். இத்தாலியில் 1990ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் அறிமுகமான கெமறூன் தனது ஆரம்பப் போட்டியில் ஆரம்ஜன்டீனாவை வீழ்த்தி வரலாறு படைத்திருந்தது. அப் போட்டியின் 67ஆவது நிமிடத்தில் ஓமாமம் பியிக் தலையினால் முட்டி போட்ட கோல் மரடோனா தலைமையிலான ஆர்ஜன்டீனாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வருடம் கால் இறுதிவரை முன்னேறியிருந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் 82ஆவது நிமிடம்வரை 2 - 1 என முன்னிலையில் கெமறூன் இருந்தது. எனினும் கெரி லினேக்கர் 83ஆவது நிமிடத்தில் போட்ட கோல், அப்போட்டியை மேலதிக நேரத்திற்கு இட்டுச் சென்றது. மேலதிக நேரத்தில் 105ஆவது நிமிடத்தில் கெரி லினேக்கர் போட்ட கோல் கெமறூனை போட்டியிலிருந்து வெளியெற்றியது.

அதன் பின்னர் 1994, 1998, 2002, 2010, 2014 உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் சுற்றுடன் வெளியேறிய கெமறு{ன் இம்முறை 1990இல் போன்று எதிர்பாராத முடிவுகளை ஏற்படுத்த முயற்சிக்கவுள்ளது.

சுவிட்சர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் தலைகீழ் முடிவை ஏற்படுத்தினால் அல்லது போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டால் அது கெமறூனுக்கு பெரு வெற்றியாக அமையும்.

கெமறூன் அணியில் முன்கள வீரரும் தலைவருமான வின்சன்ட் அபூபக்கர் மிக முக்கிய வீரராக இடம்பெறுகிறார். அனுபவம் வாய்ந்த 30 வயதுடைய அபூபக்கர் தனது 3ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடுகிறார்.

அணித் தலைவர் அபூபக்கரை விட கோல்காப்பளார் அண்ட்றே ஒனானா, பின்கள வீரர் கொலின்ஸ் ஃபாய், முன்கள வீரர்களான கார்ள் டொக்கோ ஏக்காம்பி மற்றும் எரிக் மெக்சிம் சௌப்போ மொட்டிங் ஆகியோர் அணியில் இடம்பெறும் பிரதான வீரர்களாவர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35