(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
13 ஆவது திருத்தத்தில் உள்ளவாறு அதிகார பகிர்வுக்கு நாங்கள் இணங்குகின்றோம். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
அரசியல் வரப்பிரசாதங்களுக்காக எமது கொள்கைகளை காட்டிக்கொடுக்கவும் மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
13 ஆவது திருத்தம் தொடர்பில் ஒவ்வொருவரிடமும் ஜனாதிபதி கேட்டார். இதுதொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு தெளிவானது. ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் அதற்கு இணங்குகிறது.
நாங்கள் ஒருபோதும் 13 பிளஸ் 13 மைனஸ் என்று கூறியது கிடையாது. அதேபோன்று 13ஐ கிழித்தெறியவும் நடவடிக்கை எடுத்ததில்லை.
ஆனால் மொட்டுக் கட்சியின் குழுவினரே வெளிநாட்டுக்கு சென்றார் 13 பிளஸ் நாட்டுக்குள் 13 மைனஸ் என்றும் கதைப்பவர்கள். ஆனால் நாங்கள் பலமான நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.
அதாவது 13 ஆவது திருத்தத்தில் உள்ளவாறு அதிகார பகிர்வுக்கு நாங்கள் இணக்கம். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அரசியல் வரப்பிரசாதங்களுக்காக எமது கொள்கைகளை நாங்கள் காட்டிக்கொடுக்கவும் மாட்டோம்.
வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் விசேட சர்வகட்சி கூட்டத்தை நடத்தி சுதந்திர தினத்திற்கு முன்னர் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இறுதித் தீர்மானத்திற்கு வருவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஒரே நாட்டுக்குள், பிளவுப் படாத நாட்டுக்குள், ஒருமைப்பாட்டை பாதுகாத்து, இறைமையை பாதுகாத்து செய்யும் அதிகார பகிர்வுக்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.
ஜனாதிபதி கூறியவாறு சுதந்திர தினத்திற்கு முன்னர் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பிரச்சினையை தீர்ப்போம்.
இதற்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் தலைமைத்துவத்தை முன்னணியில் இருந்து வழங்குவதற்கு நாங்கள் தயார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM