பருவநிலை மாற்றம், வேலைப்பளு, உடல்நலப் பிரச்சினை, உணர்ச்சிவசப்படுதல், மனஅழுத்தம், அதீத சிந்தனை, தூக்கமின்மை, நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணினி பயன்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் சிலருக்கு தலைவலி உண்டாகலாம்.
இதற்கு சில எளிய பயிற்சிகள் மூலம் தீர்வு காண முடியும். அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.
பயிற்சி 1:
கைகளைப் பக்கவாட்டில் வைத்தபடி, முழங்கால்களை மடக்காமல் விரிப்பில் நேராக நிமிர்ந்து நிற்கவும். பின்பு கைகளை தலைக்குமேல் மெதுவாக உயர்த்தவும்.
இப்போது இடுப்புப் பகுதியில் அழுத்தம் கொடுத்து, உடலை பின்புறமாக முடிந்தவரை வளைக்கவும். இப்போது மூச்சை உள் இழுத்தவாறு குதிகால்களை மெதுவாக உயர்த்தவும்.
இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும். பின்னர் மூச்சை வெளிவிட்டவாறு குதிக்கால்களை கீழே இறக்கி, மீண்டும் பழைய நிலைக்கு வரவும். 10 வினாடிகள் இடைவெளிக்குப் பின்பு மீண்டும் இப்பயிற்சியை தொடர்ந்து 5 முறை செய்யலாம்.
பயிற்சி 2:
விரிப்பில் குப்புறப்படுக்கவும். வலது காலை மடக்கி, வலது கையால் பின்புறமாகப் பிடிக்கவும். இடது கையை நேராக முன்புறம் நீட்டவும்.
அதேபோல் இடது காலையும் நேராக நீட்டவும். இப்போது இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் அழுத்தம் கொடுத்து உடலையும், கால்களையும் மேல்நோக்கி வளைக்கவும். இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும். பின் மீண்டும் பழைய நிலைக்கு வரவும். 10 வினாடிகள் இடைவெளிக்குப் பின்பு இப்பயிற்சியை தொடர்ந்து 5 முறை செய்யலாம்.
பயிற்சி 3:
விரிப்பில் நேராக நிமிர்ந்து உட்காரவும். கால்களை நேராக நீட்டவும். கைகளை பக்கவாட்டில் தரையில் பதிக்கவும். முழங்கால்களை மடக்காமல், தோள்பட்டை மற்றும் முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். இப்போது பாதத்தை முன்னும் பின்னுமாக லேசாக அசைக்கலாம். அதே நேரம் தலையை மட்டும் கீழே இறக்கி, மார்புப் பகுதியில் தாடை படும்படி செய்யவும். இதே போல் 5 முறை இந்த பயிற்சியை செய்யலாம்.
பயன்கள்:
தலைக்குச் செல்லும் நரம்புகளின் இயக்கம் சீராகி, தலைவலி குறையும். மூளையில் உள்ள செல்களுக்கு புத்துணர்வு கிடைக்கும். உடலின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தும். தலைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களின் செயல்பாட்டை சீராக்கும். மன அமைதிக்கு வழிவகுக்கும். உடலில் உள்ள கழிவுகளை நீக்கும்.
கால் மற்றும் முதுகுப் பகுதியை வலுப்படுத்தும். உடல் தோற்றத்தை மேம்படுத்தும். தலை, கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் வலிகளை குறைத்து, எலும்பை உறுதியாக்கும். இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்கும். உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் பரவச் செய்யும். உள் உறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்தும். நரம்புப் பிடிப்பு மற்றும் தசைப் பிடிப்பை நீக்கும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், கர்ப்பிணிகள் இந்த பயிற்சியை மருத்துவரின் ஆலோசனைப்படி செய்ய வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM