(ஏ.என்.ஐ)
தெற்கு காஷ்மீரில் தற்போது தீவிர பயங்கரவாதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதுடன் மனிதாபிமானமற்ற செயல்களை சமூகம் கண்டிக்கிறது.
ஆனால் கொடூரமான பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் சென்றடைந்த ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, யக்குநர் ஜெனரல் தில்பாக் சிங் தலைமையிலான குழுவினர், அனந்த்நாக் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கூட்டுபாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர். கூட்டத்தில் இந்திய இராணுவம், மத்திய ரிசர்வ் பொலிஸ் படை மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் படைகளின் பணி மற்றும் தொழில்முறை பல்வேறு அரங்கங்களில் பாராட்டப்படுவதாக ஜெனரல் தில்பாக் சிங் கூறினார்.
காவல்துறை, பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான உறவு சிறப்பான முறையில் உள்ளதாகவும், அதனைத் தக்க வைத்துக்கொள்ள படைகள் பொதுமக்களை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பொதுமக்களின் நல்லெண்ணம் அதன் அமைதிப் பணியில் படைகளுக்கு உறுதுணையாக உள்ளது. எஞ்சியிருக்கும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர கடுமையாக உழைக்க வேண்டும்.
அதிகாரிகளின் செயல் திட்டங்களை ஆய்வு செய்து, பயங்கரவாதிகளை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவும் கலப்பு பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த ஆண்டு இதுவரை 100 க்கும் மேற்பட்ட கலப்பின பயங்கரவாதிகளின் தொகுதிகள் அழிக்கப்பட்டது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் குறைப்பதற்கும் நடுநிலையாக்குவதற்கும் உத்வேகம் அளிக்கும் அதேவேளையில், பாகிஸ்தான் பயங்கரவாதக் கையாளுவோரின் போதனைகள் நடந்துவருவதாகவும், பாதிக்கப்படக்கூடிய ,ளைஞர்களை மூளைச்சலவை செய்ய பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்துவதாகவும் கூறினார்.
பயங்கரவாதச் செயல்களைச் செயல்படுத்துவதில் பாகிஸ்தான் கையாளுபவர்களுக்கு உதவும் கீழ் மட்ட செயற்பாட்டளர்கள்.
அதிகமாக இருப்பதாக அவர் கூறினார். பாகிஸ்தான் பயங்கரவாதக் கையாளுவோரின் வலையில் பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களைக் காப்பாற்ற பல்வேறு பாதுகாப்பு மற்றும் அரசாங்கத்தின் பங்குதாரர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
நீண்டகால அமைதியை நிலைநாட்ட பயங்கரவாதிகள் மற்றும் அவர்களை ஊக்குவிப்பவர்கள் மீது படைகள் கடுமையாக தாக்க வேண்டும்.
போதைப்பொருள் வர்த்தக வலையமைப்பை தகர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இதன் போது உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM