மலச்சிக்கலா ? அலட்சியம் காட்டினால் மூலநோய் அபாயம்

By Digital Desk 2

24 Nov, 2022 | 12:39 PM
image

உலகம் முழுவதும் உள்ள பொதுவான உடல்நல பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கும் மலச்சிக்கலை சுமார் 22% எதிர்கொண்டுள்ளனர்.

இதில் 13% பேருக்கு கடும் மலச்சிக்கல் இருப்பதாகவும், குறிப்பாக பெருநகரமக்கள் மலச்சிக்கலால் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மலச்சிக்கல் பாதிப்பை கவனிக்காமல் நீண்ட நாட்களுக்கு தொடர அனுமதிக்க கூடாது. அப்படி நீடித்தால் ஒரு கட்டத்தில் மூலநோய் (பைல்ஸ்) நோயை ஏற்படுத்த கூடும். பைல்ஸ் என்பது மலக்குடல் மற்றும் ஆசனவாயில் வீக்கம் மற்றும் வீக்கமடைந்த நரம்புகள், அசௌகரியம் மற்றும் ரத்தப்போக்கு உள்ளிட்ட கடும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

மலம் கழிக்கும் பழக்கம் நபருக்கு நபர் மாறுபடும். வாரத்திற்கு 3 முறை முதல் ஒரு நாளில் 3 முறை மலம் கழிப்பது என்பது இயல்பு. வாரத்திற்கு 3 முறைக்கும் குறைவாக மலம் கழிப்பவருக்கு மலச்சிக்கல் பாதிப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த பாதிப்பு உள்ளவருக்கு மலம் கழிக்கும் அனுபவம் வேதனையாக இருக்கும். மலம் கழிப்பதில் சிரமம், வீக்கம் மற்றும் குமட்டல் உணர்வு, வயிற்று பிடிப்புகள், மலம் கழித்த பிறகும் முழுமையாக மலம் கழிக்கவில்லை என்ற உணர்வு உள்ளிட்ட பல அறிகுறிகள் காணப்படும்.

மலம் வெளியேறுவது என்பது சற்று சிக்கலான உடலியல் நிகழ்வு. மலக்குடலில் மலம் இருப்பது அங்குள்ள உணர்திறன் ஏற்பிகளால் அறியப்படுட்டு அவை மூளைக்கு சிக்கனல்களை அனுப்புகின்றன.

மலத்தை மலக்குடலுக்குள் செலுத்த சுருங்குவதற்கு மூளையானது பெருங்குடலுக்கு சிக்னல் அனுப்புகிறது. அதே நேரம் ஒருவர் நபர் தனது வயிற்று தசைகளை சுருக்கி அடிவயிற்று அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம் ஆசனவாயிலிருந்து மலம் வெளியேறுகிறது. இந்த செயல்முறைகளில் ஏதேனும் ஒழுங்காக நடக்காவிட்டால் மலம் கழிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது.

மலச்சிக்கல் ஏற்பட காரணம்..?

கழிப்பறை பழக்கத்தில் சிக்கலை ஏற்படுத்த பல காரணிகள் உள்ளன. எனினும் மலச்சிக்கலுக்கான பொதுவான சில காரணங்களில் டிஹைட்ரேட்டாக இருப்பது, டயட்டில் நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை சேர்ப்பது, உடல் செயல்பாடுகளின்றி இருப்பது, ஓபியாய்டு வலி மருந்துகள், பசியின்மை, இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான மருந்துகள், போதுமான திட உணவுகளை டயட்டில் சேர்க்காதது உள்ளிட்டவை. இவை தவிர நீரிழிவு நோய், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள், ஹைப்போ தைராய்டிசம், கர்ப்பம், இரும்பு டானிக்ஸ், மனநோய்களுக்கான மருந்துகள், வலி நிவாரணிகள், ஆன்டாசிட்ஸ், அலர்ஜி மெடிசின்ஸ் உள்ளிட்டவை கூட மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

 இரிடபிள் பவுல் சின்ட்ரோம் (irritable bowel syndrome) என்பது பெருங்குடலில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு கோளாறு ஆகும். மிகவும் பொதுவான இரைப்பை குடல் கோளாறாக குறிப்பிடப்படுகிறது.

மலச்சிக்கலை குறைக்க மலமிளக்கியை நீண்ட காலம் பயன்படுத்துவது குறிப்பாக டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல் உடனடியாகக் கிடைக்கும் சில மலமிளக்கிகள் தீங்கு விளைவிக்கும்.

இது தவிர உணர்ச்சிவசப்படுதல், மனஅழுத்தம், பதற்றம் போன்ற உணர்வுகள் சிலரின் குடலில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் வயிற்றில் வலி ஏற்படுவதோடு உப்புசம், மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு உள்ளிட்ட பல அறிகுறிகள் வெளிப்படும்.

டைவர்டிகுலோசிஸ் அல்லது நரம்பியல் நோய்களும் மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். இவற்றை சரிசெய்ய அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மலச்சிக்கலுக்கான சில தீவிர காரணங்களில் பெருங்குடல் கட்டிகள் மற்றும் புற்றுநோய்கள் இருக்க கூடும்.

எனவே குடல் இயக்கத்தில் திடீர் தீவிர மாற்றம் ஏற்பட்டால் மருத்துவர்களை (. இரைப்பைக் குடலியல் நிபுணர்/இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர்) கலந்தாலோசிக்க வேண்டும். ரத்த பரிசோதனைகள், கொலோனோஸ்கோபி, பேரியம் எக்ஸ்-ரே மற்றும் CT/MRI ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் செய்யப்படலாம்.

சிகிச்சை:

மலச்சிக்கலுக்கான காரணத்தை பொறுத்து சிகிச்சைகள் இருக்கும். மலச்சிக்கலை சரி செய்வதில் முக்கிய பங்கு வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு உள்ளது. தினசரி டயட்டில் தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், சாலடுகள், பழங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் சேர்க்கப்பட வேண்டும். அதே நேரம் கார்போஹைட்ரேட்ஸ், இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்களை குறைக்க வேண்டும். காபி, காஃபின் மற்றும் மற்றும் குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்கவும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். சுறுசுறுப்பான நடைப்பயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சிகள், கழிவறைக்கு சென்றால் மலம் கழிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவது, காலை எழுந்தவுடன் லெமன் வாட்டர் குடிப்பது, வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது மலச்சிக்கலை குறைக்க உதவும். மலச்சிக்கலை ஏற்படுத்தும் மருந்துகளில் மாற்றங்கள் செய்வது, வீட்டு வைத்தியம் உள்ளிட்டவை உதவலாம்.

ஆஸ்மோடிக், பல்க், ஸ்டிமுலன்ட்ஸ் மற்றும் ஸ்டூல் சாஃப்ட்னர்ஸ் உள்ளிட்ட பல வகை மலமிளக்கிகள் உள்ளன. இதை எடுப்பதற்கான அளவுகள் தேவைகள் நோயாளியை பொறுத்தது. எதை பயன்படுத்தினாலும் குறைந்தபட்ச காலத்திற்கு பயன்படுத்தி மலச்சிக்கலை சரி செய்வதில் பெரும்பாலும் வாழ்க்கை முறை மாற்றங்களை சார்ந்திருக்க வேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால் அலட்சியம் செய்யாமல் நிபுணரை பார்க்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேதிப்பொருட்களால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்

2022-11-25 13:17:56
news-image

ரைனிட்டிஸ் மெடிகமென்டோசா எனும் மூக்கடைப்பு பாதிப்பிற்கான...

2022-11-25 10:44:45
news-image

குழந்தை வயிற்று வலியால் அழுகிறதா?

2022-11-24 17:29:31
news-image

மலச்சிக்கலா ? அலட்சியம் காட்டினால் மூலநோய்...

2022-11-24 12:39:37
news-image

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேனில்...

2022-11-24 12:23:13
news-image

குழந்தையை கறுப்பாக்குமா இரும்புச் சத்து ?

2022-11-24 11:44:18
news-image

குழந்தைகளின் இதயம்

2022-11-23 16:05:33
news-image

இளம் வயதில் மாரடைப்பு ஏற்படக் காரணம்...

2022-11-23 12:12:37
news-image

உடல்நிலை சீராக இல்லாத நேரத்தில் உடற்பயிற்சி...

2022-11-23 12:24:33
news-image

ப்ளூரெடீக் பெய்ன் என்றால் என்ன ?

2022-11-23 11:10:06
news-image

தாமதமடையும் குழந்தைப்பாக்கியம் – காரணம் என்ன..?

2022-11-22 17:20:12
news-image

குளிர்ந்த நீரில் குளித்தால் உயிர் பிரியுமா...

2022-11-22 17:40:39