நீர்கொழும்பு மற்றும் கொழும்புக்கிடையிலான ரயில் கடவையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் முச்சக்கர வண்டி சாரதிகள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்தாரை பிரயோகங்களை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் முச்சக்கரவண்டி சாரதிகளை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தொடர்ந்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் குறித்த கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு – நீர்கொழும்புக்கிடையிலான ரயில் பாதையை மறித்து கல்கந்த பிரதேசத்தில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.