வவுனியா மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என தன்னை அடையாளப்படுத்தி நீல நிற இரத்தினக்கல்லை மோசடி செய்தார் என கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் பிரபல தொலைக்காட்சி நடிகை மஞ்சுளா குமாரி பெரேராவின் முகவரான தொலைக்காட்சி நாடக நடிகர் என லக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் வேடத்தில் பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துவரும் மினுவாங்கெட்ட வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.டி.எம். குணரத்ன பண்டார என்ற நபராவார்.
நடிகை மஞ்சுளா குமாரி பெரேரா, லக்கல தேவலதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சுரங்க அகழ்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார்,
இந்த நடிகையின் பிரதிநிதியே சந்தேகத்தில் கைதான துணைத் தொலைக்காட்சி நடிகராவார். இவரே வவுனியாவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என தன்னை பல மாதங்களாக பிரதேசவாசிகளிடம் கூறி வந்துள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM