நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேனில் ஊறவைத்த பூண்டு!

By Ponmalar

24 Nov, 2022 | 12:23 PM
image

சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை தடுக்கும் நிவாரணியாக தேனில் ஊறவைத்த பூண்டு காணப்படுகிறது.

உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். எனவே தான் காலையில் எழுந்ததும் உட்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு நற்பகல், மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம்.

எடை இழப்பு, ஜலதோஷம், நச்சு நீக்கம் மற்றும் பலவற்றிற்கு பூண்டு எப்போதும் ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் என்று கூறப்படுகிறது. தேனுடன் பூண்டை இணைத்தால் அவற்றின் நன்மைகள் உடனடியாக இரட்டிப்பாகும்.

உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது தேன். உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம்.

நல்ல மருத்துவ குணம் வாய்ந்த  தேன் மற்றும் பூண்டை சேர்த்து உட்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு அதிகரித்து, அன்றாடம் தாக்கும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடிகிறது.

தேனில் ஊறவைத்த பூண்டு செய்முறை: 
முதலில் பூண்டை தோலுரித்து இரண்டாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு, காற்று புகாத கண்ணாடி ஜாடியில் பச்சையாக, பேஸ்டுரைஸ் செய்யப்படாத தேனில் கலக்கவும். பின்னர் ஒரு வாரம் ஊற வைக்கவும். அவ்வளவுதான் தேனில் ஊறவைத்த பூண்டு தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேதிப்பொருட்களால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்

2022-11-25 13:17:56
news-image

ரைனிட்டிஸ் மெடிகமென்டோசா எனும் மூக்கடைப்பு பாதிப்பிற்கான...

2022-11-25 10:44:45
news-image

குழந்தை வயிற்று வலியால் அழுகிறதா?

2022-11-24 17:29:31
news-image

மலச்சிக்கலா ? அலட்சியம் காட்டினால் மூலநோய்...

2022-11-24 12:39:37
news-image

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேனில்...

2022-11-24 12:23:13
news-image

குழந்தையை கறுப்பாக்குமா இரும்புச் சத்து ?

2022-11-24 11:44:18
news-image

குழந்தைகளின் இதயம்

2022-11-23 16:05:33
news-image

இளம் வயதில் மாரடைப்பு ஏற்படக் காரணம்...

2022-11-23 12:12:37
news-image

உடல்நிலை சீராக இல்லாத நேரத்தில் உடற்பயிற்சி...

2022-11-23 12:24:33
news-image

ப்ளூரெடீக் பெய்ன் என்றால் என்ன ?

2022-11-23 11:10:06
news-image

தாமதமடையும் குழந்தைப்பாக்கியம் – காரணம் என்ன..?

2022-11-22 17:20:12
news-image

குளிர்ந்த நீரில் குளித்தால் உயிர் பிரியுமா...

2022-11-22 17:40:39