(லியோ நிரோஷ தர்ஷன்)

தேசிய  இனப்பிரச்சினை தொடர்பில் தீர்வு ஏற்படுத்த வட்ட மேசை பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி அழைத்துள்ளமையின் உத்தியோகப்பூர்வ தன்மை தொடர்பில் சந்தேகம் உள்ளது. கொழும்பிற்கு வா என்பது போல் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைக்க முடியுமா என கூட்டு எதிர் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். 

அரசியலமைப்பு சபை ஒன்றுள்ளது. அதிகாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சியும் உள்ளது. இந்நிலையில் நிகழச்சி நிரலற்ற அழைப்பிற்கு அழைப்பதும் அவ்வாறான அழைப்பிதழ் எமக்கு கிடைக்கவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வட்டமேசை பேச்சு ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் தெளிவுப்படுத்தும் போதே பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன  மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனப்பிரச்சினைக்கு வருமாறு அழைத்துள்ளதாக கூறுகின்றீர்கள். அவ்வாறான உத்தியோகப்பூர்வ அழைப்பு எமக்கு கிடைக்வில்லை. அழைத்துள்ளார் என்றால் நாங்கள் எங்கே செல்வது. கொழும்பிற்கா ? அதிகாரத்தில் நாங்கள் இல்லை . பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுமே உள்ளனர். 

அதே போன்று அரசியலமைப்பு சபை ஒன்றுள்ளது. ஆனால் எவ்விதமான தெளிவற்றதும் உத்தியோகப்பூர்வமற்றதுமான அறிவிப்புகள் மற்றும் அழைப்புகளை மையப்படுத்தி எம்மால் செயற்படவோ பதிலளிக்கவோ முடியாது. பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பதாயின் வெளிப்படைத்தன்மை மற்றும் நிகழச்சி நிரல் காணப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.