குறுக்குச் சிறுத்தவளே !

By Ponmalar

24 Nov, 2022 | 11:42 AM
image

கேள்வி: 


எனது வயது 21. நான் ஒரு பெண். எனது தோள்பட்டை அகலமாகவும், இடுப்புக்குக் கீழ்ப்பகுதி, தொடைப் பகுதி என்பன மிகவும் மெலிவாகவும் இருக்கின்றன.

இதனால் மனதுக்குப் பிடித்த ஆடையை அணிய முடியவில்லை. அப்படியே அணிந்தாலும், அது அழகான தோற்றத்தை தருவதில்லை. மிகவும் அசிங்கமாக இருப்பதாக நண்பிகள் கேலி செய்கின்றனர்.

இதனால் மிகுந்த கவலையாக இருக்கிறது. கண்ணாடியில் என் உடம்பைப் பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை. இப்படியே போனால், எனக்கு திருமணமாகுமா? திருமணத்தின் பின் கணவன் இதை ஒரு குறையாக காண்பாரா என்று பயப்படுகிறேன். என் தோற்றம் மாற என்ன வழி?

பதில்: 


தோள்பட்டையின் அகலத்தை குறைப்பதெல்லாம் முடியாத காரியம். அதற்குப் பதிலாக, அந்தத் தோள்பட்டைக்கு ஏற்ற அளவுக்கு உங்கள் இடையின் கீழ்ப் பகுதியை மாற்றிக்கொள்ளுங்கள்.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு உடற்பயிற்சி ஒன்றே சரியான தீர்வு. இப்போது ஸ{ம்பா, ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகள் வந்துவிட்டன. இவை, உடலின் ஒவ்வொரு தசைநாருக்குமென பிரத்தியேகமான பயிற்சிகளை தரக்கூடியன. இப்பயிற்சிகள் மூலம் குறித்த பகுதியை பெருப்பிக்கவோ சிறுப்பிக்கவோ முடியும்.

உங்களது தொடைகள் அகலமாக வேண்டும் என்று விரும்பினால் அதற்கென பிரத்தியேக பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றை செய்தால் உங்கள் பிரச்சினை ஓடிவிடும்.

கவலையை மூட்டை கட்டி வைத்துவிட்டு, தகுதியான ஒரு ஏரோபிக்ஸ் மற்றும் ஸ{ம்பா பயிற்சியாளரை தேட ஆரம்பியுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right