பெண்களின் நண்பர் வட்டம்

Published By: Ponmalar

24 Nov, 2022 | 11:07 AM
image

நம் வாழ்வில் நிகழும் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, துன்பம் என அனைத்து உணர்வுகளின்போதும் உடன் இருப்பவர்கள் நண்பர்கள். 

ஆண்-பெண் இருவருடைய வாழ்க்கையிலும் நட்பும், நண்பர்களும் முக்கியமானது. ஆனால், பெண்களின் நட்பு வட்டம், வாழ்க்கையில் ஒரு கட்டத்துக்கு மேல் நிலையற்றது ஆகிவிடுகிறது. எனினும், பிறந்ததில் இருந்து பருவம் அடையும் வரை தந்தை, பதின்பருவத்தில் தாய், திருமணத்துக்குப் பிறகு கணவர், குழந்தைப்பேறுக்குப் பின்பு பிள்ளைகள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்பிக்கைக்குரிய உறவே, பெண்களுக்கு நண்பர்களாக மாறும். 

பெண்களின் நண்பர்கள் வட்டம் நிலையற்று போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அவர்களின் வாழ்வில் அனைத்து காலகட்டத்திலும் வயதுவரம்பு இல்லாத ஒரு நண்பர் இருந்துகொண்டே இருப்பார். 

அது அவர்களோடு தினமும் உடன் பயணிக்கும் பூ விற்கும் பாட்டி, கடலை விற்கும் தாத்தா, அலுவலக பாதுகாவலர், தெருவில் விளையாடும் குழந்தைகள், கீச்சிடும் குருவி, தோட்டத்து ரோஜா என எதுவாகவும், யாராகவும் இருக்கலாம். 

காரணம், அன்புக்கும் நட்புக்கும் வயது, பாலினம், நிறம், சமூகம் போன்ற எதுவும் தடை இல்லை. எதிர்பார்ப்பற்ற நட்பு எனும் உறவை, எப்போதும் மரியாதையுடன் வழிநடத்தி வாழ்வை இனிதாக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்