2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஜேர்மனிய அணியினர் தமது முதல் போட்டிக்கு முன்னர் அணியாக இணைந்து போஸ் கொடுத்தபோது, தமது வாயை கையால் பொத்திக்கொண்டிருந்தனர்.
ஒருபாலின உறவுகொள்பவர்கள், பாலின மாற்றம் செய்தவர்கள் உட்பட்ட எல்ஜிபிடிகியூ (LGBTQ) சமூகத்தின் உரிமைகளுக்கு ஆதரவாக 'வன்லவ்' எனும் கைப்பட்டியை போட்டிகளின் போது அணிவதற்கு பீபா தடை விதித்திருந்தது.
போட்டியின்போது இக்கைப்பட்டியை அணிந்தால் மஞ்சள் அட்டை காட்டப்படும் என பீபா எச்சரிக்கப்பட்டது.
இத்தடைக்கு தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில், நேற்று நடைபெற்ற ஜப்பானுடனான போட்டிக்கு முன்பதாகஜேர்மனிய வீரர்கள் வாயை பொத்திக்கொண்டு போஸ்கொடுத்துள்ளனர்.
இதன்போது, ஜேர்மனிய அணித்தலைவர் மனுவெல் நோயா உட்பட வீரர்கள் சிலர், எல்ஜிபிடிகியூ சமூகத்தினரை குறிக்கும் வானவில் நிறம் பொறிக்கப்பட்ட பாதணிகளையும் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது, அத்துடன் பயிற்சியின்போ ஜேர்மனிய வீரர்கள் அனைவரும் கைப் பகுதியில் வானவில் நிறம் கொண்ட அங்கியை அணிந்திருந்தனர்.
எனினும், 4 தடவைகள் உலக சம்பியனான ஜப்பான் அணி ஜேர்மனிய அணி 2:1 விகிதத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது,
தொடர்புடைய செய்திகள்
வானவில் நிறம் கொண்ட ஆடையுடன் உலகக் கிண்ண அரங்கில் டென்மார்க் முன்னாள் பிரதமர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM