முன்வைத்த கோரிக்கைகளுக்கு முடிவுக்கிட்டாததால் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என தனியார் பஸ் ஊழியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச தண்டப்பணமான 25 ஆயிரம் ரூபாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதிலும் தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் , முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் உட்பட பல  போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிக்பை முன்னெடுத்துள்ளன.

எவ்வாறாயினும் தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு கிட்டாததால் பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.