மலையக கவிதைகள் பற்றிய இரண்டு ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா

By Nanthini

24 Nov, 2022 | 10:22 AM
image

ண்டி தமிழ் வர்த்தகர் சங்கம் மற்றும் கண்டி முஸ்லிம் வர்த்தகர் சங்கம் என்பவற்றின் ஆதரவுடன், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியை திருமதி. எம்.ஏ.எஸ்.எப். சாதியா பௌசர் எழுதிய மலையக கவிதைகள் பற்றிய  இரண்டு ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி டி.எஸ். சேனாநாயக்க வீதியில் அமைந்துள்ள ஜின்னா நினைவு மண்டபத்தில் பி.ப. 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் துரை மனோகரன் தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விழாவில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் மற்றும் பேராதனை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் செ.யோகராசாவினால்  நூல் அறிமுகம் செய்யப்படும். 

தென் கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா அவர்கள் பாராட்டுரை நிகழ்த்துவார்.

நிகழ்வில் 'மலையக கவிதைகளும் மக்களும்' மற்றும் 'மலையகக் கவிதைகளில் பெண்களும் சிறுவர்களும்' என்ற இரு ஆய்வு நூல்களே   வெளியிட்டு வைக்கப்படவுள்ளன. 

அத்தோடு இந்நூல் வெளியீட்டு விழாவில் இன்னும் பல தமிழ் முஸ்லிம் பிரமுகர்களும் உரையாற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா...

2022-11-26 09:51:57
news-image

டி.ஏ.ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினம்

2022-11-25 18:56:28
news-image

‘மறைந்தும் மறையாத’ மாதாந்த இசை நிகழ்ச்சி

2022-11-25 19:00:05
news-image

கல்முனை அல் பஹ்ரியாவில் அபிவிருத்திக் குழு,...

2022-11-25 15:15:24
news-image

'ஊன்றுகோல்' நூல் அறிமுகவிழா

2022-11-25 13:58:40
news-image

அலியாவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு விளையாட்டுப் பொருட்கள்...

2022-11-25 14:09:04
news-image

வெருகல் பிரதேச இலக்கிய விழா

2022-11-25 11:36:30
news-image

நுண்கலைத் துறையில் இளங்கலைஞர் விருது பெற்றார்...

2022-11-25 11:01:52
news-image

மறைந்த முத்து சிவலிங்கத்தின் இறுதி ஊர்வலம்

2022-11-25 09:46:57
news-image

புதுக்குடியிருப்பு கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம்...

2022-11-24 16:40:55
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன்...

2022-11-24 15:18:34
news-image

கொழும்பு -15 புனித அந்திரேயார் ஆலய...

2022-11-24 14:46:50