ரணிலைத் தவிர வேறு யாரும் ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தால் நாடு மயான பூமியாகியிருக்கும் - ரோஹித

Published By: Vishnu

23 Nov, 2022 | 06:56 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

கோத்தாபய ராஜபக்ஷ் அன்று ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியிருக்காவிட்டால் அவர் இப்போது உயிருடன் இருந்திருக்க மாட்டார்.

அத்துடன் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்காது வேறு ஒருவர் பதவியேற்றிருந்தால் இந்த நாடு மயான பூமியாகியிருக்கும் என ஆளும் கட்சி  உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட 16  விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ் பதவி வகித்த காலத்தில் அவர் போராட்டத்திற்கு முகம்கொடுக்க நேரிட்டார். மீரிஹானவில் உள்ள அவரின் வீட்டை சுற்றி வளைத்து ஆரம்பித்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றும் நிலைமைக்கு போனது. கோத்தாபய ராஜபக்ஷ் அப்போது புதிய பிரதமரை நியமிக்க நடவடிக்கை எடுத்த போது பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, சரத்பொன்சேகா, அனுரகுமார, டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் அந்தப் பதவிக்கு குறிப்பிடப்பட்டன. இதன்போது நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணங்கினோம். அனுபவம் உள்ள, சர்வதேசத்துடன் பேசக்கூடியவருக்கு அந்தப் பதவியை வழங்க இணங்கினோம்.

அத்துடன் ஜனாதிபதியும் பதவி விலக நேரிட்டது. அன்று அவர் நாட்டை விட்டு போயிருக்காவிட்டால் அவர் இப்போது உயிருடன் இருந்திருக்கமாட்டார். அன்று அவர் கப்பல் மூலம் திருகோணமலைக்கு போயிருக்காவிட்டால் அவர் உயிருடன் இருந்திருக்கமாட்டார். அப்போது ஏற்பட்ட ஜனாதிபதி பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க நாங்கள் இணங்கினோம்.

இதன்படி ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்காது வேறு ஒருவர் பதவியேற்றிருந்தால் இந்த நாடு மயான பூமியாகியிருக்கும் என்பதுடன், அவர் போராட்டக்காரர்களின் பணயக் கைதியாகிருப்பார். அத்துடன் போராட்டக்காரர்கள் நாட்டை சீரழித்திருப்பார்கள். ஆனால் ரணில் விக்கிரமசிங்க புதிய இராணுவம், பொலிஸார் இன்றி, இருந்த பாதுகாப்பு பிரிவினரைக் கொண்டே போராட்டத்தை நிறுத்த நடவடிக்கைகளை எடுத்தார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத மணல் அகழ்வுகளால் நிலக் கண்ணி...

2023-03-26 20:42:59
news-image

மட்டக்களப்பு வாவியொன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

2023-03-26 20:40:31
news-image

கடல் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர்...

2023-03-26 20:39:51
news-image

பால் தேநீரின் விலை நாளை முதல்...

2023-03-26 18:19:23
news-image

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு...

2023-03-26 18:12:21
news-image

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை...

2023-03-26 17:45:52
news-image

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த...

2023-03-26 16:46:29
news-image

தாயை கொலை செய்த மகன் 8...

2023-03-26 16:27:09
news-image

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு ...

2023-03-26 15:45:23
news-image

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்...

2023-03-26 16:05:17
news-image

போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர்...

2023-03-26 14:39:26
news-image

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி...

2023-03-26 14:11:27