சுற்றுலா மறுமலர்ச்சிக்கான உலகளாவிய விற்பனை மாநாடு

By Digital Desk 2

23 Nov, 2022 | 07:06 PM
image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் உலகளாவிய விற்பனை மாநாடு, நான்கு நாள் நிகழ்வொன்றின் போது, 150க்கும் மேற்பட்ட உலகின் முதன்மையான பயண முகவர்கள் மற்றும் சுற்றுலாப் பயண ஏற்பாட்டாளர்கள் ((Tour operators) ஆகியோருக்கு இந்நாட்டின் சுற்றுலாவுக்கான தயார்நிலையை காட்சிப்படுத்தியதன் மூலம் ஒரு வெற்றிகரமான முடிவை எட்டியுள்ளது. 

அண்மைய வரலாற்றில் சர்வதேச பயண வர்த்தகத்திலிருந்து மிகப்பெரிய குழுவை இம் மாநாடு இலங்கைக்கு கொண்டு வந்துள்ளது.

பாதுகாப்பான மற்றும் தன்பால் உலகளாவிய பயணிகளை கவர்ந்திழுப்பதற்கு ஆயத்தமாகவுள்ள மற்றும் அற்புதமான சுற்றுலாத் தலமான சிகிரியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் இக்குழுவினர் இலங்கையின் கண்ணோட்டத்தைப் பற்றி அறியும் பொருட்டு அதன் உயரிய தரமதிப்பீடு பெற்ற சுற்றுலாத் தலங்களை நேரில் அனுபவித்தனர். 

பயண வர்த்தக துறை பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக விமான சேவையின் வெளிநாட்டு பொது விற்பனை முகவர்கள் மற்றும் ஸ்ரீலங்கன் ஹொலிடேஸின் (SriLankan Holidays) உரிமையாளர்கள்  ஆகியோர் இந்த கருத்தரங்கில் பங்குபற்றினர்.

இம்மாநாட்டிற்கு முன்னதாக, யால தேசிய பூங்கா எல்ல, கண்டி, காலி, பேருவலை, சிகிரியா, நுவரெலியா, ஹபரன, பொலன்னறுவை, அனுராதபுரம், ரிதிகல, நீர்கொழும்பு, மற்றும் கொழும்பு போன்ற இடங்களுக்கான சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட சுற்றுலாப் பயணமும் மேற்கொள்ளப்பட்டது. 

இச்சுற்றுப் பயணத்தில் புதிதாக, 2022 நவம்பர் 18 ஆம் திகதியன்று அலியா ரிசார்ட்டில் ((Aliya Resort) இடம்பெற்ற பிரதான மாநாட்டில் இக்குழுவினர் கலந்துகொண்டு, சுற்றுப் பயணத்தின் தாம் பெற்ற நேர்மறையான அனுபவங்களை பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

அவர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் தலைமையில் இடம்பெற்ற பல ஊடாடும் அமர்வுகளிலும் ஈடுபட்டனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் வரலாறு; இலங்கையை சுற்றுலாப் பயண இலக்காக மாற்றியமைக்கும் நிலை மற்றும் ‘தீவு முழுவதும்’ என்ற தலைப்பிலான (சுற்றுலா) இலக்குகள் தொடர்பான முதன்மையான வீடியோ போன்ற விடயங்களை இவ்வமர்வுகள் உள்ளடக்கியிருந்தன.

புகழ்பெற்ற விருந்தினர் பேச்சாளர்களான, ரெய்ட் எமசோன்ஸ் (Raid Amazones) இன் நிறுவனர் அலெக்ஸ்சான்டர் டீபென் (Alexandre Debanne) மற்றும் எக்ஸ்பீடியா (Expedia) குழுமத்தின் சிரேஷ்ட வர்த்தக மேம்பாட்டு முகாமையாளர் பியூ மினோசா (Piyush Minocha) ஆகியோர், முறையாக, பிரான்ஸிய சுற்றுலாப் பயணிகளிடத்தில் இலங்கையை சந்தைப்படுத்துதல் மற்றும் நிலையான சுற்றுலாவுக்கான இலங்கையின் சாத்தியக்கூறுகள் குறித்து உரையாற்றினர். பிரதம நிறைவேற்று அதிகாரியான ரிச்சர்ட் நட்டல் (Richard Nuttall), ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் உலகளாவிய விற்பனை மற்றும் விநியோகத் தலைவர் திமுத்து தென்னகோன் (Dimuthu Tennakoon) மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாஹஹூ (Chalaka Gajabahu) ஆகியோர் அடங்கிய குழு கலந்துரையாடலுடன் இம்மாநாடு நிறைவுற்றதுடன் குளோபல் எலையன்செஸ் என்ட் பார்ட்னசிப்ஸ் (Global Alliances & Partnerships) இன் சிரேஷ்ட துணைத் தலைவர் டிலீப் முதாதெனிய (Dileep Mudadeniya) மற்றும் ஜோன் கீள்ஸ் (John Keells) குழுவின் ஓய்வு துறையினர் இதை ஒழுங்கமைத்தனர். 

இலங்கை கைவினைப்பொருட் கண்காட்சி நடைபெறும் இடத்தில், உள்ளூர் கைவினைஞர்களின் பாரம்பரிய கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தியது மாநாட்டின் சிறப்பு அம்சமாக அமைந்திருந்தது.

இலங்கைத்தீவின் கலாச்சார கைவினைப் பொருட்களான மட்பாண்டங்கள் செய்தல், டிரம்ஸ் (drums), பித்தளைப் பொருட்கள், இனம்சார் நகைகள் மற்றும் மரத்தாலான முகமூடிகள் செய்தல் போன்றன உலகளாவிய பயண வர்த்தக பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்தியாவின் ஆன்டா டிராவல்ஸ் (Anta Travels) நிறுவனத்தின்; பொது முகாமையாளர் குமார் வேலூர் ஜெகதீசன் (Kumar Vellore Jagadeesan) என்பவர், “இலங்கையில் நாங்கள் தங்கியிருந்த காலம் முழுவதும், எங்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தோம்பல் மற்றும் கவனிப்பால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். இதுவே இலங்கையை மற்ற நாடுகளிலிருந்து தனித்து நிற்கச் செய்கின்றது. இலங்கை மக்களின் உள்ளார்ந்த அக்கறை காட்டும் வழிமுறைகள், ஒரு பயணி தனது விடுமுறை ஒருபோதும் முடிவடையாதிருக்க வேண்டுமென ஆசைகொள்ள வைக்கின்றது” என்று கூறினார். 

இதேபோன்ற உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில், எக்ஸிகியூட்டிவ் ஏவியேன் பாக்கிஸ்தானின் (நுஒநஉரவiஎந யுஎயைவழைn Pயமளைவயn) வர்த்தக அபிவிருத்தித் தலைவரான கன்வால் பைசல் ஜியா (முயறெயட குயணையட ணுயை) என்பவர், “ஊடகங்களில் இலங்கையைப் பற்றி என்ன கூறப்பட்டாலும், நாடு முற்றிலும் அழகாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது என்பதை உணர எனக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. இப்போது நான் ஒவ்வொரு வருடமும் திரும்பி வர வேண்டுமென விரும்புகின்றேன். நீங்கள் இலங்கையை ஆராய்ந்தால், அதை நீங்களும் உணர்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார். 

மேலும், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, லண்டனில் உள்ள உலகச் சுற்றுலா சந்தை (WTM)) மற்றும் ஐடிபி பேர்லின் (ITB Berlin) போன்ற உலகளாவிய முன்னணி சுற்றுலா நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட சுற்றுலாச் சந்தை ஒன்று, மாநாட்டுக்கு அடுத்த நாளன்று ஏற்பாடு செய்யப்பட்டது. சுற்றுலா சந்தை, உள்ளூர் (சுற்றுலா) இலக்கு முகாமைத்துவ நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா நடாத்துநர்கள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயண முகவர்களைச் சந்தித்து வணிக வாய்ப்புகள் தொடர்பாக ஆராய்வதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பினை வழங்கியது. 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே (Ashok Pathirage) அவர்கள், “இலங்கையின் சுற்றுலாத் துறையின் மீட்சி மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு அதற்கான அடித்தளத்தை அமைப்பதன் மூலம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீண்டும் ஒருமுறை அதைச் செய்து காட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பு, எதிர்வரும் காலங்களில் இலங்கையை உயர் பெறுமதிமிக்க சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான தேசிய நோக்கத்தை நனவாக்குவதற்கு பங்களிப்புச் செய்யும் என நான் உறுதியாக நம்புகின்றேன்” என்று கூறினார்.

“இலங்கை ஒரு பாதுகாப்பான மற்றும் கண்கவர் இடமாக உள்ளது என்பதை உலகிற்கு மீளவும் உறுதியளிக்கும் வகையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேற்கொண்ட இந்த ஒரு வகையான முயற்சிக்கு ஆதரவளிப்பதற்கு பல்வேறு சிறந்த சர்வதேச (சுற்றுலா) முகவர்கள் ஒன்றிணைந்தது மிகவும் சிறந்தது. இலங்கையானது உலகின் நட்பு நாடுகளில் ஒன்றாக அண்மையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உண்மை யாதெனில், இலங்கை எப்போதுமே அன்பானதாகவும் வரவேற்பதாகவும் இருந்து வருவதுடன், இந்த அற்புதமான நாட்டின் மக்கள் எப்போதும் அதன் விருந்தினர்களைக் கவனித்துக்கொள்கின்றார்கள். அத்துடன் (இலங்கைக்கு) வருகை தரும் (சுற்றுலா) முகவர்கள் இதனை நேரடியாக அனுபவித்து, தங்கள் சொந்த  சந்கைகளில் இலங்கையை விரிவாக விளம்பரப்படுத்த உத்தேசித்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றபோது மகிழ்ச்சியளிக்கின்றது”, என விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டல் (Richard Nuttall) மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் உலகளாவிய விற்பனை மற்றும் விநியோகத் தலைவரான திமுத்து தென்னகோன் (Dimuthu Tennakoon) அவர்கள், “ எமது பிரதான நோக்கம், இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதாகும். மேலும், இந்நிகழ்வு இந்த நோக்கத்தை முன்னெடுத்துச் சென்று எமது செயற்திறன்வாய்ந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு சந்தேகத்திற்கு இடமின்றி உதவி செய்யும். இந்த மாநாட்டை மகத்தான வெற்றியாக மாற்ற அயராது உழைத்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் அனைத்து வெவ்வேறு குழுக்களுக்கும் நான் நன்றி கூற விரும்புகின்றேன். சவாலான காலகட்டத்தின் பின்னர் இலங்கையில் சுற்றுலாத்துறை புத்துயிர் பெறுவதற்கான சிறந்த அறிகுறிகள் தென்படுவதுடன், இம்மாநாட்டில் இடம்பெற்ற பல்வேறுபட்ட துறைசார்ந்த பங்குதாரர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் மற்றும் வாய்ப்புகள் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்” என்று கூறினார். 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் உலகளாவிய விற்பனை மாநாட்டின் முடிவோடு, விமான நிறுவனம் இந்த குளிர்காலத்தில் இலக்கை மையமாகக்கொண்ட செயற்திறனையும் வாக்களிக்கப்பட்ட எண்ணிக்கையிலான பயணிகளையும் எதிர்பார்க்கின்றது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்போது 60 நாடுகளில் உள்ள 114 இடங்களுக்கு ஒன்லைன் (online) மற்றும் குறியீட்டு பகிர்வு நடவடிக்கைகள் மூலம் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை வழங்குகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா...

2022-11-26 09:51:57
news-image

டி.ஏ.ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினம்

2022-11-25 18:56:28
news-image

‘மறைந்தும் மறையாத’ மாதாந்த இசை நிகழ்ச்சி

2022-11-25 19:00:05
news-image

கல்முனை அல் பஹ்ரியாவில் அபிவிருத்திக் குழு,...

2022-11-25 15:15:24
news-image

'ஊன்றுகோல்' நூல் அறிமுகவிழா

2022-11-25 13:58:40
news-image

அலியாவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு விளையாட்டுப் பொருட்கள்...

2022-11-25 14:09:04
news-image

வெருகல் பிரதேச இலக்கிய விழா

2022-11-25 11:36:30
news-image

நுண்கலைத் துறையில் இளங்கலைஞர் விருது பெற்றார்...

2022-11-25 11:01:52
news-image

மறைந்த முத்து சிவலிங்கத்தின் இறுதி ஊர்வலம்

2022-11-25 09:46:57
news-image

புதுக்குடியிருப்பு கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம்...

2022-11-24 16:40:55
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன்...

2022-11-24 15:18:34
news-image

கொழும்பு -15 புனித அந்திரேயார் ஆலய...

2022-11-24 14:46:50